Posts

பௌர்ணமி நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா?

மாசி மாதத்தில் தோன்றும் பௌர்ணமியானது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் கடைசி பௌர்ணமி ஆகும். ஐரோப்பிய நாடுகளில் இது பனிநிலவு என அழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள பூகோளப் பகுதிகளுக்கும் இது கோடையின் கடைசி நிலவாக உள்ளது. பூமியின் எதிரெதிர் திசைகளில் சூரியனும் நிலவும் இருக்கும் போது பௌர்ணமி தோன்றுகிறது. எனவே நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழுபகுதியும் ஒளிர்கிறது. உலகமெங்கிலும் கலாசாரத்தையும், மரபையும் கட்டமைப்பதில் பௌர்ணமி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வான் நிகழ்வுடன் தொடர்புடைய சில சுவாரசியமான கட்டுக் கதைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவற்றின் தார்ப்பரியங்கள் என்பவை பற்றி இங்கே பார்க்கலாம்.  ஏன் பௌர்ணமி நாள் முக்கியமானதாக இருந்தது? நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை பருவங்கள் பண்டைய காலம் முதலே காலத்தைக் கணிப்பதற்காக பயன்பட்டு வந்துள்ளன. இலையுதிர்க்கால இரவு பகலுக்கு அருகில் (செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபரின் முற்பகுதி) நிகழும் பௌர்ணமிக்கு அறுவடை நிலவு என பெயரிடப்பட்டுள்ளது. வருடத்தின் இந்த நேரத்தில் சூரியன் மறைந்த உடனேயே நிலவு உதிக்கும். அதாவது அறுவடை செய்யப்பட்ட...

விண்வெளி

விண்வெளி எப்பொழுதுமே எமக்கு ஆச்சரியம் ஊட்டுவதாக அமைந்து வந்துள்ளது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை விண்வெளியை பார்த்து வியக்காதோர் இல்லை என்றே சொல்லலாம். கோடிக்கணக்கான அதிசயங்கள் கொட்டிக் கிடக்கிறது இந்த விண்வெளியில். பால்வெளி, கருந்துளைகள், வேற்றுகிரக வாசிகள் போன்ற புரியாத ஏராளமான மனித சிந்தனைக்கு எட்டாத பல விடயங்களை கொண்டுள்ளது. இந்த கட்டுரையில் விண்வெளி பற்றிய சில தகவல்களை பார்க்கலாம்.   விண்வெளி எவ்வளவு பெரியது? மிகப் பெரியது. ஆனால் எவ்வளவு? இதனை துல்லியமாக அறிந்து கொள்வது இயலாத காரியம். இதை ஒப்பீட்டளவில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதாவது, சூரியனின் விட்டம் 14 லட்சம் கிலோமீட்டர்கள். நமது சூரியக் குடும்பத்துக்கு அருகில் இருக்கும் நட்சத்திரமான ஆல்ஃபா சென்டாரி 41 லட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. அதற்கு மேல் அளக்க, விஞ்ஞானிகள் ஒளியாண்டுகள் என்ற அலகினைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஒளியாண்டு என்பது, ஓராண்டில் ஒளி கடக்கும் தூரம். அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள். நமது பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் அகலம், 1.2 லட்சம் ஒளியாண்டுகள். பால்வெளி, ஆண்ட்ரோம...

டைனோசர்கள்

உலகில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்திய உயிரினமான டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிகல்லால் அழிந்து போனதாக அறியப்படுகிறது. இந்த அழிவு பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு புதிராக இருந்து வந்தது. இப்போது, 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கழிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு, இந்த புதிருக்கு ஒரு விடையை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர்' என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. டைனோசர்கள், உலகம் முழுவதும் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அதிசயமான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட விலங்குகளாகும். அவர்கள் மூன்று முக்கியத்துவமான காலப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர்: துவக்கம் (டிரயாசிக் காலம்), மகாபரிணாமம் (ஜூராசிக் காலம்), மற்றும் இறுதிக்கால பரிணாமம் (கிரெட்டேசியஸ் காலம்). இந்த காலங்களில், டைனோசர்கள் வேறுபட்ட வகைகளில் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தனர். டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி எளிதாக இருந்ததா? முற்றிலும் இல்லை. இந்த காலத்தில், பூமி மற்றும் அதன் சூழல் நிலை பெரிய மாற்றங்களின் மூலம்...

நமக்கு உப்பு ஏன் அவசியம்?

நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான சுவையூட்டிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கியமான சுவையூட்டி உப்பு ஆகும். உப்பு நமது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கவும் பயன்படுகிறது. பண்டைய காலங்களில் உப்பானது தங்கம், வெள்ளி என்பவற்றுக்கு சமமாக மதிக்கப்ட்டுள்ளது. உப்பு பெரும்பாலும் கடல் நீரில் இருந்தே கிடைக்கிறது. உப்பு மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல உப்பும் நமது உடலில் அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை பற்றிய விரிவான விபரத்தை கீழே பார்க்கலாம். உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல...

அமெரிக்கா : உலகின் வல்லரசு

உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடு தான் ஐக்கிய அமெரிக்கா. உலக நாடுகளுக்கு எல்லாம் முதன்மையானதாக காணப்படும் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ மொழி கிடையாது. இந்த நாட்டின் முக்கிய சின்னமாக விளங்கும் 151 அடி உயரமான சுதந்திர தேவி சிலையை 1886 ஆம் ஆண்டு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கியது. உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்று, மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பு, அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி என சகல துறைகளிலும் தன்னை நன்கு தகவமைத்து உலகின் வல்லரசாக உயர்ந்துள்ளது. இங்குள்ள அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதை தங்கள் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அமெரிக்கர்கள் தங்கள் முகம் ஒரு தடவையாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரவேண்டும் என ஆசை கொண்டவர்கள். இவர்கள் தன்னார்வல பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும், அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. வருடத்திற்கு சுமார் 15000 கொலைகள் நடைபெறுகிறது. அமெரிக்கர்கள் எவ்வாறு சாதரணமாக அனைவரும் கைத்தொலைபேசியை பாவிப்பார்களோ அதேபோல துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அத்துடன் மருத்துவத் துறையில் பல சிறிய நாடுக...

சதுரங்கம்

சதுரங்கம் உலகில் உள்ள புத்திசாலிகளின் விளையாட்டு என வர்ணிக்கப்படுகிறது. இவ் விளையாட்டின் தாயகம் இந்தியாவாகும். இன்று உள்ளக விளையாட்டுகளில் சதுரங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சதுரங்கத்தில் யானை, குதிரை, கோட்டை, மந்திரிகள் என்று நால்வகை சேனைகளைக் கொண்டு விளையாடப்பட்டதால் ஆரம்ப காலங்களில் இது 'சதுரங்க சேனை' என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'சதுரங்கம்' என பெயர் பெற்றது. இதனை ஆங்கிலத்தில் “செஸ்” எனவும் அழைப்பர். விளையாட்டுகளின் அரசனாக சதுரங்கம் இருப்பதோடு, அக்காலகட்டங்களில் அரசர்களின் விளையாட்டாகவும் சதுரங்கம் இருந்துள்ளது. இதனால்,  'The King of Games, The Game of Kings' ' என இந்த விளையாட்டு வர்ணிக்கப்பட்டது. இந்தியாவில் சதுரங்க விளையாட்டானது, அரசர் காலத்தில் இருந்தே விளையாடப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி 6 ஆம் நூற்றாண்டிலேயே இச் சதுரங்கம் பாரசீகம், சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது இந்த சதுரங்கம் ஆடப்படுகிறது. உலகமெங்கும் சதுரங்கம் ஆர்வமுடனும் போ...

ஹிட்லரின் எனது போராட்டம்

உலக சரித்திரத்தின் போக்கையே தன் பக்கம் திருப்பியவர், ஒரு இனத்தையே தனியொருவனாக நின்று அழித்துக் காட்டியவர், உலக வல்லரசுகள் பல எதிர்த்தபோதும் கூட தனது கொள்கைளில் இருந்து சிறிதும் நெறி தவறாது நின்றவர் அடோல்ப் ஹிட்லர். உலக நாடுகள் அனைத்தையும் ஒரு மகா யுத்தத்தில் கொண்டுவந்து நிறுத்திய ஹிட்லர் எதனை எதிர்பார்த்து இந்த யுத்தத்தை ஆரம்பித்தார்? அவரின் கொள்கைகள் தான் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கான பதிலை சொல்லும் புத்தகம் தான் மெயின் கேம்ப். இந்தப் புத்தகம் ஹிட்லரின் வரலாறை கூறவில்லை. இதில் அவரின் கொள்கைகள், ஜேர்மன் சோசலிசம், முதலாம் உலக யுத்தம் பற்றிய அவரின் கண்ணோட்டங்கள் போன்ற கருத்துக்களை கூறுகின்றன. மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் (mein kampf) எனது போராட்டம் அல்லது எனது யுத்தம் என்று பொருள்படும் தலைப்பில் தன் சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடோல்ப் ஹிட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுப்பு 1925 லும், இரண்டாம் தொகுப்பு 1926-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 19...

குகேஸ்: இளம் சதுரங்க சாம்பியன்

கடந்த சில தினங்களாக நாம் அதிகம் கேள்விபட்ட பெயர்களில் ஒன்றுதான் குகேஸ். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.” இது சதுரங்க விளையாட்டில் மிகப்பெரும் வரலாற்றை படைத்துள்ள ஒருவருடைய வார்த்தைகள். சதுரங்க வீரர்களின் பொதுவான கனவாக இருப்பது ஒரு தடவையாவது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் அதை இளம் வயதிலேயே அடைந்து காட்டியுள்ளார் 18 வயதான குகேஸ், தமிழக வீரரான இவர், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, உலகில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சாம்பியன்ஸிப் போட்டியின் இளம் போட்டியாளராகத் தேர்வான அவர், தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் இளம் செஸ் வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். உலக சாம்பியன்ஸிப் பட்டத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, "எனக்குத் தெரியாது, நான் முதலில் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிலளித்தார் குகேஸ். இந்த மகத்தான சாதனைக்கு பின் அவரிடம் இருந்த அர்ப்பணிப்புக்கள், தியா...

உலகின் மிகச்சிறிய நாடுகள்

நாடு என்றால் அது பல்லின மக்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் என்றே நாம் பொதுவாக கருதுவோம். எனினும், மிகவும் சிறிய நிலப்பரப்பில் அமைந்த அரசுரிமை பெற்ற நாடுகளும் உலகில் உள்ளன. ஐரோப்பா, கரீபியன் தீவுகள் மற்றும் பசுபிக் பிராந்தியத்திலேயே இவ்வாறான நாடுகள் பெருபாலும் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை 400 சதுர கிலோமீற்றரிலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டவையாகும். அந்த வகையில், உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில், நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடுகளாக கருதப்படும் பத்து நாடுகள் பற்றிய விபரம் இங்கே பார்ப்போம். மால்ட்டா  மால்ட்டா இன் பரப்பளவு 316 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்த நாடு, பிரதானமாக கோஸோ, கொமினோ மற்றும் மால்ட்டா என்ற மூன்று தீவுகளை உள்ளடக்கியுள்ளது. மால்ட்டா தீவானது ஏனையவற்றை விட விசாலமானது. இது மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். இங்கு பிரதானமான மொழி மால்ட்டீஸ் ஆகும். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய வரலாற்றினைக் கொண்ட மால்ட்டா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு நாடாகும். இங்கு நிலவும் வெப்பமான காலநிலையும் அழகிய கடற்கரையும் சுற்றுல...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஜான் பெர்கின்ஸின் சுயசரிதை என்றே சொல்லாம். இது 2004 இல் ஆங்கிலத்தில் ஜான் பெர்கின்ஸால் வெளியிடப்பட்டது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதால் பல நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்தது. இதற்கு இருந்த வரவேற்பின் காரணமாக 2012 இல் இரா.முருகவேள் இதை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழிலும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெர்கின்ஸின் சொந்த அனுபவங்களே ஆகும். அவர் ஒரு பொருளாதார அடியாளாக தனது வாழ்பனுபவத்தை பகிர்ந்துள்ளார். பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்களே பொருளாதார அடியாட்கள் ஆவார். இந்த நூலில் கூறப்படுவது அவ்வாறான ஒரு அடியாளான ஜான் பெர்கின்ஸின் வாக்குமூலமே ஆகும். இதில் அமெரிக்கா உலக நாடுகளின் மீது எவ்வாறு கொடூரமாக செயற்பட்டது என்பதை ஜான் பெர்கின்ஸ் கூற விளைகிறார். உ...

சீனா : உலகின் பெரிய நாடு

சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும்.  உலகில் ரஸ்யா, கனடா க்கு அடுத்து பரப்பளவில் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிலையான உறுப்புரிமையை கொண்ட நாடு. இந்நாட்டின் தலைநகரம் பிஜிங் ஆகும். சாங்காய் இதன் பெரிய நகரம் ஆகும். உலகில் தோன்றிய பழமைவாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்று. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. சீனர்கள் தங்கள் புதுவருடத்தை மற்ற நாடுகளை போல் அல்லாமல் ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 20 ற்குள் வரும் நாடகளில் கொண்டாடப்படுகிறது. இவர்கள் புதுவருடத்தை 15 நாட்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் புரட்சியின் அடையாளமாக இருக்கும் சிவப்பு நிறத்தை சீன மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் தேசிய கொடியில் சிவப்பு நிறத்தை பிரதானப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த சிவப்பு நிறத்தை மகிழ்ச்சியின் அடையாளமாக கொண்டுள்ளனர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 56 பாரம்பரிய இடங்கள் இங்கு காணப்படுகின்றன. இத்தாலிக்கு அடுத்து அதிகளவான பாரம்பரிய இடங்களை கொண்ட நாடு சீனா தான். முதியோர் ந...

சுவையான மருத்துவ குணமும் கொண்ட மாம்பழம்

பழங்களின் அரசன் என அடைமொழி கொண்டு அழைக்கப்படும் பழம் தான் மாம்பழம். இலகுவில் நாம் பெறக்கூடிய பழங்களில் மாம்பழமும் ஓன்று. உலகில் அதிகளவான மக்களால் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் முதன்மையானது மாம்பழமாகும். சித்திரை வைகாசி மாதங்களில் பொதுவாக மாம்பழம் பெருமளவில் கிடைக்கின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் மாமரங்களை நாம் காணலாம். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள முக்கனிகளில் ஒன்று தான் இந்த மாம்பழம். இந்த பழம் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாகவும் உள்ளது. மாம்பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. மாமரம் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது. இந்த மாமரங்களின் தோற்றம் இந்தியாவில் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்கள் புராண கதைகளில் இருந்து தற்போது வரும் சினிமா பாடல்கள், கவிதைகள் வரை இடம்பெற்றிருப்பது மாம்பழத்திற்கு உண்டான சிறப்பை எடுத்துகூறுகிறது. இன்று உலகம் முழுவதும் பல வகையான இன மாமரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் சேலத்து மாம்பழத்திற்கும் ஈழத்தின் யாழ்ப்பாண மாம்பழத்திற்கும் ஒரு தனி மவுசு எப்பொழுதுமே உண்...