பௌர்ணமி நாளில் மனிதர்கள் ஓநாயாக மாறினார்களா?
மாசி மாதத்தில் தோன்றும் பௌர்ணமியானது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தின் கடைசி பௌர்ணமி ஆகும். ஐரோப்பிய நாடுகளில் இது பனிநிலவு என அழைக்கப்படுகிறது. பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ள பூகோளப் பகுதிகளுக்கும் இது கோடையின் கடைசி நிலவாக உள்ளது. பூமியின் எதிரெதிர் திசைகளில் சூரியனும் நிலவும் இருக்கும் போது பௌர்ணமி தோன்றுகிறது. எனவே நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழுபகுதியும் ஒளிர்கிறது. உலகமெங்கிலும் கலாசாரத்தையும், மரபையும் கட்டமைப்பதில் பௌர்ணமி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வான் நிகழ்வுடன் தொடர்புடைய சில சுவாரசியமான கட்டுக் கதைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவற்றின் தார்ப்பரியங்கள் என்பவை பற்றி இங்கே பார்க்கலாம். ஏன் பௌர்ணமி நாள் முக்கியமானதாக இருந்தது? நிலவின் வளர்பிறை மற்றும் தேய்பிறை பருவங்கள் பண்டைய காலம் முதலே காலத்தைக் கணிப்பதற்காக பயன்பட்டு வந்துள்ளன. இலையுதிர்க்கால இரவு பகலுக்கு அருகில் (செப்டம்பர் பிற்பகுதி அல்லது அக்டோபரின் முற்பகுதி) நிகழும் பௌர்ணமிக்கு அறுவடை நிலவு என பெயரிடப்பட்டுள்ளது. வருடத்தின் இந்த நேரத்தில் சூரியன் மறைந்த உடனேயே நிலவு உதிக்கும். அதாவது அறுவடை செய்யப்பட்ட...