நமக்கு உப்பு ஏன் அவசியம்?
நாம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான சுவையூட்டிகளை பயன்படுத்துகிறோம். அவற்றுள் முக்கியமான சுவையூட்டி உப்பு ஆகும். உப்பு நமது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. அத்துடன் உணவுகளை நீண்ட நாட்கள் பாதுகாத்து வைக்கவும் பயன்படுகிறது. பண்டைய காலங்களில் உப்பானது தங்கம், வெள்ளி என்பவற்றுக்கு சமமாக மதிக்கப்ட்டுள்ளது. உப்பு பெரும்பாலும் கடல் நீரில் இருந்தே கிடைக்கிறது. உப்பு மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது ஆகும். உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல உப்பும் நமது உடலில் அதிகரித்தால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அதை பற்றிய விரிவான விபரத்தை கீழே பார்க்கலாம். உப்பின் முக்கியத்துவம் “உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின். "நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல...