Posts

Showing posts with the label history

டைனோசர்கள்

உலகில் மிகப்பெரிய ஆதிக்கத்தை ஏற்படுத்திய உயிரினமான டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த எரிகல்லால் அழிந்து போனதாக அறியப்படுகிறது. இந்த அழிவு பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்களுக்கு புதிராக இருந்து வந்தது. இப்போது, 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கழிவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வு, இந்த புதிருக்கு ஒரு விடையை வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் 'நேச்சர்' என்னும் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. டைனோசர்கள், உலகம் முழுவதும் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு அதிசயமான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட விலங்குகளாகும். அவர்கள் மூன்று முக்கியத்துவமான காலப்பகுதிகளில் வாழ்ந்துள்ளனர்: துவக்கம் (டிரயாசிக் காலம்), மகாபரிணாமம் (ஜூராசிக் காலம்), மற்றும் இறுதிக்கால பரிணாமம் (கிரெட்டேசியஸ் காலம்). இந்த காலங்களில், டைனோசர்கள் வேறுபட்ட வகைகளில் பரிணாம வளர்ச்சி பெற்றிருந்தனர். டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய டைனோசர்களின் பரிணாம வளர்ச்சி எளிதாக இருந்ததா? முற்றிலும் இல்லை. இந்த காலத்தில், பூமி மற்றும் அதன் சூழல் நிலை பெரிய மாற்றங்களின் மூலம்...

ஆஸ்திரேலியா : பாலைவன தேசம்

கங்காரு தேசம் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மிகச் சிறியதும் தீவுகளில் மிகப் பெரியதுமாகும். ஆஸ்திரேலியா எந்த நாட்டுடனும் தன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நாடு சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாகும். 16 ஆம் நூற்றாண்டில் தான் ஆஸ்திரேலியா எனும் நாடு உலகத்தின் பார்வைக்கு வந்தது. இந்த நாட்டில் 95 வீதமான இடங்கள் வெறுமையாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் மத்திய பகுதி பாலைவனமாகவே உள்ளது. மக்கள் கரையோர பிரதேசங்களில் மட்டுமே வசிக்கின்றனர். உலகின் சிறந்த கல்விமுறை உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா எட்டாவது இடத்தில் உள்ளது. 200 தொடக்கம் 300 வரையான மொழிகளை பேசும் பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கின்றனர். தினமும் ஒரு கடற்கரை வீதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் பார்வையிட வேண்டுமானால் சுமார் குறைந்தது 32 ஆண்டுகள் தேவைப்படும். இங்குள்ள மக்களை விட விலங்குகளே அதிகம் உண்டு. அதற்கு காரணம் இங்கு பெரும்பாலான இடங்களில் மனித நடமாட்டங்கள் இல்லை.       தலைநகரம் - கான்பெரா பிரதமர் - அந்தோனி அல்பனீசி அரசாங்கம் - மக்களாட்சி சுதந்திர தினம் - 03 மார்ச் 1947 நாணயம் - ஆஸ்த...

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாக பல அரிய நூல்களுடன் இயங்கி வந்த யாழ்ப்பாண நூலகம் 1981 மே 31 அன்று தீக்கிரையானது. யாழ் நூலகம் ஓரே நாளில் எரிந்துவிடவில்லை. மூன்று தினங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. அந்த மூன்று நாட்களும் நூலகம் மட்டும் எரியவில்லை. ஓட்டுமொத்த யாழ் நகரமும் சிதைந்து போனது காடையர்களின் தாக்குதாலால். எரிந்தது நூலகம் மட்டுமல்ல தமிழ் வரலாறுமே தான். உலகின் பல நாடுகள் பிறக்கும் முன்னமே தோன்றிய மொழி தமிழ்.  உலகம் முழுவதிலும் இருந்து தேடி தேடி கொண்டு வந்து சேர்த்த பல நூல்கள், ஓலைச்சுவடிகள் என ஆயிரக் கணக்கான ஆவணங்கள் யாழ் நூலகத்தில் இருந்தன. இன்னும் சொல்வதென்றால் நூலகம் எரிக்கபட்ட சமயத்தில் நூல்களை விட ஓலைச்சுவடிகளே அனேகம் இருந்துள்ளது. நூல்கள் பிறக்க முதலே ஓலைச்சுவடிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சற்று சிந்தித்தால் விளங்கும் அழிக்கபட்டது நூற்றாண்டுகளாக சேகரித்த வரலாறு மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகள் முன்னம் சேகரித்த வரலாறுகள் என்று. பல நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் பலர் வந்து பயன்பெற்று சென்றுள்ளனர். அந்நிய நாட்டவர்களுக்கு தெரிந்த முக்கியதுவம் இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு...

இந்தியா: பாரம்பரியத்தின் புகலிடம்

இந்தியா, தென் ஆசியாவில் அமைந்துள்ள ஒரு பழமையான நாடாகும். 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. அத்துடன் இரண்டாவது மிகப்பெரிய சனத்தொகையை கொண்ட நாடு. இங்கு பல மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள், பல மதங்கள் என்பவற்றை கொண்ட புராதன நாடாகும். பல இராச்சியங்கள் தோன்றி மறைந்துள்ள போதும் இன்னமும் அவை உலகிற்கு அழிக்க முடியாத பல விடயங்களை இன்னும் சுமந்து கொண்டு உள்ளது. வல்லரசு நாடுகளே விண்வெளி ஆராய்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்க இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சியையே உருவாக்கிவிட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உலக அரங்கில் இந்தியா வலுவான ஜனநாயக நாடாக விளங்குகிறது. மேலும் உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதாரத்தில் மட்டுமின்றி கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது. தலைநகரம் - புதுடில்லி பிரதமர் - நரேந்திர மோடி அரசாங்கம் - கூட்டாட்சி நாடளுமன்ற அரசியலமைப்பு குடியரசு சுதந்திர தினம் - 15 ஆகஸ்ட் 1947 குடியரசு தினம் - 26 ஜனவரி 1950 நாணயம் - இந்திய ரூபாய் நேர வலயம் ...

தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தலின் அவசியம்

ஆவணப்படுத்தல் என்பது குறிப்பிட்ட சில நிகழ்வுகளை தலைமுறை கடந்தும் அதை தெரியப்படுத்த பேணி பாதுகாக்கும் ஒரு முறை ஆகும். ஆவணப்படுத்தல் நூல்கள், பத்திரிகைகள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள், காணொளிகள் போன்ற வடிவங்களிலும் இடம்பெறலாம், ஆவணமாக்கல் முறையானது முற்றுமுழுதாக உண்மைத் தன்மை உடையதாக, உள்ளதை உள்ளபடியாக சொல்வதாக இருக்க வேணடும். வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலம் நம் பழக்கவழக்கங்கள், அரசியல், கலாச்சாரங்கள், வாழ்க்கைமுறை போன்ற அடையாளங்களையும் அறிந்து கொள்ள முடியும். ஒரு இனத்தின் நிலைத்திருப்பிற்கு வரலாறு மிக முக்கியமானதாகும். எந்தவொரு இனம் தனது வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சரியாக எடுத்து செல்கிறதோ அந்த இனமே காலமுள்ள வரை நிலைத்து நிற்கும். பண்டைய காலம் தொட்டு இன்று வரை எந்தவொரு இனம் தனது வரலாற்றை பாதுகாக்க தவறுகிறதோ அந்த இனம் காலவோட்டத்தில் காணாமல் போகும் என்பதில் ஐயமில்லை. இன்று தமிழினமும் இவ்வாறான ஒரு துரதிஸ்டமான நிலைக்கு வந்துள்ளமை கவலைக்குரியது. மிக நீண்ட நெடிய வரலாற்றை கொண்ட ஒரு இனம் இன்று தனது இருப்பை நிலைநிறுத்த மிக பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் சம...

நூற்றாண்டுகள் கடந்த யாழ்ப்பாணக் கோட்டை

இலங்கைத் தீவு நீண்ட நெடிய ஒரு வரலாற்றைக் கொண்ட நாடு. இராமாயண காலந்தொட்டு மிகப் பெரிய வரலாற்று சாட்சியங்களை சுமந்து நிற்கிறது. இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதால் பல மேற்குலக நாடுகளின் பார்வை ஈழத்தின் மீது விழுந்தது. வணிக, வர்த்தக தொடர்பு, இயற்கை துறைமுகம், ஆசிய நாடுளை கண்காணிக்க ஏதுவான கேந்திர அமைப்பு போன்ற முக்கியத்துவத்தால் போத்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய நாடுகளின் ஆதிக்கதிற்கும் உட்பட்டு வந்துள்ளது. இங்கு தமிழ், சிங்களம் என இரண்டு இன மக்கள் ஒன்றித்து வாழ்கின்றனர். அவ்வப்போது இவ்விரு இனங்களுக்குள்ளும் ஏற்படும் முரண் நிலையில் அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்கள் சாத்தியமாகியது. 400 ஆண்டுகளுக்கு மேல் மேற்குலக நாடுகளின் கட்டுபாட்டில் சிக்கித் தவித்தது ஈழத் திருநாடு. மேற்குலக நாடுகளின் நாடுகாண் பயணத்தின் விளைவாக இந்த ஆக்கிரமிப்புக்கள் ஆரம்பமாகின. முதலாவதாக போர்த்துக்கீசர் 1505 இல் இலங்கையின் கரையோர பிரதேசங்களைக் கைப்பற்றினர். அவர்களால் கரையோர பிரதேசங்களை மட்டுமே கைப்பற்றமுடிந்தது. அதன்பின் 1658 வந்த ஒல்லாந்தர்களின் முக்கிய நோக்கம் தங்கள் மதத்தை பரப்புவதே. 1796...