ஆஸ்திரேலியா : பாலைவன தேசம்
கங்காரு தேசம் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியா உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மிகச் சிறியதும் தீவுகளில் மிகப் பெரியதுமாகும். ஆஸ்திரேலியா எந்த நாட்டுடனும் தன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த நாடு சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாகும். 16 ஆம் நூற்றாண்டில் தான் ஆஸ்திரேலியா எனும் நாடு உலகத்தின் பார்வைக்கு வந்தது. இந்த நாட்டில் 95 வீதமான இடங்கள் வெறுமையாக உள்ளது. ஆஸ்திரேலியாவில் மத்திய பகுதி பாலைவனமாகவே உள்ளது. மக்கள் கரையோர பிரதேசங்களில் மட்டுமே வசிக்கின்றனர். உலகின் சிறந்த கல்விமுறை உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா எட்டாவது இடத்தில் உள்ளது. 200 தொடக்கம் 300 வரையான மொழிகளை பேசும் பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கின்றனர். தினமும் ஒரு கடற்கரை வீதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து கடற்கரைகளையும் பார்வையிட வேண்டுமானால் சுமார் குறைந்தது 32 ஆண்டுகள் தேவைப்படும். இங்குள்ள மக்களை விட விலங்குகளே அதிகம் உண்டு. அதற்கு காரணம் இங்கு பெரும்பாலான இடங்களில் மனித நடமாட்டங்கள் இல்லை.
தலைநகரம் - கான்பெரா
பிரதமர் - அந்தோனி அல்பனீசி
அரசாங்கம் - மக்களாட்சி
சுதந்திர தினம் - 03 மார்ச் 1947
நாணயம் - ஆஸ்திரேலிய டாலர்
தேசிய மொழி – ஆங்கிலம்
நேர வலயம் - +8 - +11
இணையக் குறி - .au
தொலைபேசி குறி - +61
மக்கள் தொகை – 26 மில்லியன்
முக்கிய நகரங்கள் - சிட்னி, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்போன்
தேசிய விளையாட்டு – கிரிகெட்
புவியியல் அமைவிடம்
ஆஸ்திரேலியா தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்ட நாடு. இந்தோ – ஆஸ்திரேலிய புவித் தட்டில் இந்திய பசுபிக் பெருங்கடலால் சூழ்ப்பட்டுள்ளது. இது கடலால் சூழப்பட்ட தீவு என்பதால் இதற்கு எந்த நாட்டுடனும் தரைவழி தொடர்புகள் இல்லை. அதனாலேயே இங்கு உலகில் வேறு எங்கும் இல்லாத உயிர் பலவகைமை காணப்படுகிறது. கங்காரு, எமு போன்ற உயிரனங்கள் இந்த கண்டத்தில் மட்டுமே காண முடியும். பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து என்பன ஆஸ்திரேலியாவிற்கு அருகில் உள்ள நாடுகளாகும். இந் நாட்டின் பெரும் பகுதி வறண்ட நிலமாகவே உள்ளது. பெரும்பாலான மக்கள் தென்கிழக்கு கடற்கரை பகுதியிலேயே செறிந்து வாழ்கின்றனர். கண்டத்தின் மையப்பகுதி பாலைவனமாக உள்ளதோடு கொடிய விசம் கொண்ட உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளது.
வரலாறு
ஆஸ்திரேலியாவில் முதல் மனிதன் குடியேறியது சுமார் 50000 வருடங்களுக்கு முன்னரே என அங்கு கிடைத்த ஆய்வுகள் கூறுகின்றன. ஆசிய ஐரோப்பிய கண்டங்களில் இருந்து தரை வழியாகவே ஆஸ்திரேலிய கண்டத்திற்குள் நுழைந்தனர். காலப் போக்கில் ஆஸ்திரேலியாவை சுற்றி கடல் மட்டம் உயரவே இந்த கண்டம் உலகில் இருந்;து தனித்து விடப்பட்டது. அத்துடன் அங்கு வந்து மக்கள் குடியேறும் வாய்ப்புக்களும் தடைப்பட்டது. இதனால் அந்நிய நாட்டவர்கள் இங்கு வந்து தரையிறங்கும் வரை இப்படி ஒரு நாடு இருப்பதை யாரும் அறியவில்லை. பெரும்பாலான உலக நாடுகளுக்கு குறைந்தது 1000 ஆண்டுகள் வரலாறுகளாவது இருக்கும் ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு அவ்வாறு ஒரு நீண்ட வரலாறு இல்லை. வெளிநாட்டவர்கள் வந்த பின்னர் தான் வரலாறுகள் எழுத ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்த நாட்டை எந்த மன்னரும் ஆளவில்லை. வெளிநாட்டவர்கள் இங்கு வரும்வரை இங்குள்ள மக்கள் வேடுவர்களாகவே தங்கள் வாழ்க்கையை கழித்துள்ளனர். அவர்கள் தக்களுக்கென தனியான கடவுள், தனியான மதம் மற்றும் வழிபாடுகளை கொண்டிருந்தனர்.
டச்சு மற்றும் போர்த்துகேய மாலுமிகளே முதன்முதலில் நாடுகாண் பயணத்தின் மூலம் பல நாடுகளை கண்டுபிடித்தனர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவிற்கும் முதலில் வருகை தந்தது டச்சு ஆராய்ச்சியாளரான விலியம் ஜான்ஸ் ஆவார். 1606 இல் வருகை தந்த இவர் ஆஸ்திரேலியாவின் வடக்கு கரையில் வந்து இறங்கினார். அவர் தான் இறங்கிய பகுதியை உலக வரைபடத்தில் சிறிய அளவிலேயே குறித்தார். அவருக்கு அப்போது தெரியவில்லை ஆஸ்திரேலியாவின் உண்மையான அளவு. அதன் பின் 1770 இல் ஆங்கிலேய ஆட்சியாளர் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையில் தரையிறங்கினார். அவர் அதற்கு நியூ சவுத் வேல்ஸ் என பெயரிட்டார். அத்துடன் அப்பகுதி ஐக்கிய இராச்சியத்திற்கு சொந்தமானது என அறிவித்து அங்கிருந்த பழங்குடியின மக்களை ஆங்கிலேய படை கொன்று குவித்தது. அதோடு அவர்களுடனும் புதுபுது நோய்களும் வந்து சேர்ந்தது. அத்துடன் நிற்காமல் 1788 முதல் ஆங்கிலேய குற்றவாளிகளை இங்கு குடியேற்றினர். இதனால் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க மேலும் புதிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த குடியேற்றங்களால் பூர்விக மக்களின் நிலங்கள் மற்றும் வாழ்வியல் பாதிக்கப்பட்டது.
நாடு பிடிக்க வந்த ஆங்கிலேய கூட்டத்திற்கு வரப்பிரசாதம் போல ஆஸ்திரேலிய மண்ணில் தங்கம் கிடைப்பது தெரிய வந்தது. 1850 ஆண்டளவில் ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்களில் தங்கம் கிடைத்தது. இதனால் பெரும்பாலான நாடுகள் இங்கு வந்து குடியேற்றம் அமைத்தனர். இது ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது. 1901 இல் ஆஸ்திரேலியாவில் தனித்தனியாக இருந்த ஆறு மாநிலங்களையும் ஒன்றிணைத்து கான்பெரா வை தலைநகராக கொண்டு ஆஸ்திரேலிய குடியரசு நிறுவப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப் போர்களில் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சார்பாக யுத்தம் செய்தது. இந்த காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவின் தொழில்துறை வளர்ச்சி அடைந்தது. இதனை தொடர்ந்து 1942 இல் ஆஸ்திரேலியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து தனது முழுமையான சுதந்திரத்தை பெற்றது. 1967 இல் பழங்குடி மக்களான அபோரிஜினல் மக்கள் உரிமைகள் குறித்து சட்டம் இயற்றி அவர்களின் நலன்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது கனிம பொருள் உற்பத்தி ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது.
அரசியல்
ஆஸ்திரேலியா நாடளுமன்ற மக்கள் ஆட்சியை கொண்ட நாடு ஆகும். மூன்றாம் சார்ள்ஸ் தற்போதைய அரசர். மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் செயற்படுகிறார். ஆனாலும் தீர்மானிங்களின் போது மன்னரின் பங்கு அத்தியாவசியம் அற்றது. அரசியலமைப்பின் படி ஆளுநர் பல நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருப்பார். இங்கு பிரதானமாக மூன்று சட்ட அமைப்புக்கள் உண்டு.
சட்டமன்றம் - இதில் அரசர், செனட் அவை, மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவார். தேசிய பாதுகாப்பு, வர்த்தகம், குடியேற்றம் போன்ற தேசிய விவகாரங்களை கையாள்கிறது.
மாநில அரசு – இதில் பிரதமர் மற்றும் அமைச்சரவை அங்கத்தவர்கள் இடம்பெறுவர். ஆறு மாநிலங்களும், இரண்டு பிராந்தியங்களும் கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்புக்களை நிர்வகிக்கின்றன.
உள்ளுராட்சி – குப்பை சேகரிப்பு, நகர திட்டமிடல் போன்ற சமூக தேவைகளை கவனிக்கிறது.
ஆஸ்திரேலிய நாடளுமன்றம் இரு பிரதான அவைகளை கொண்டுள்ளது. முதலவாது பிரதிநிதிகள் சபை 151 பிரதிநிதிகளை கொண்டிருக்கும். பெரும்பாண்மை ஆசனங்களை பெறும் கட்சியே ஆட்சியை கைப்பற்றும். அக்கட்சியின் தலைவர் பிரதமராக தெரிவு செய்யப்படுவார். இரண்டாவது செனட். இது 76 உறுப்பினர்களை கொண்டு செயற்ப்படுகிறது. இரு அவைகளுக்குமான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இங்கு ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சி, லிபரல் கட்சி என்பன முக்கியமான கட்சிகளாகும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
கலாச்சாரம் மற்றும் பண்பாடு
ஆஸ்திரேலியாவிற்கான கலாசாரங்கள் ஆங்கிலேய காலணிய தாக்கங்களின் விளைவாக உருவானதே ஆசிய ஐரோப்பிய கலாசார மற்றும் பண்பாடுகளின் கலவையாகும். எனினும் இங்கு வாழ்ந்த பழங்குடி மக்களால் சில பண்பாடுகள் பின்பற்றப்ட்டடு வந்துள்ளன. இவர்களிடம் உலகின் தோற்றம் மற்றும் மனித வாழ்க்கையின் வழிகாட்டுதல்களை விளக்கும் வாய்வழி மூலமான கதைகள் என்பன நடைமுறையில் உள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் நடனம், இசை, ஓவியம் போன்றவற்றில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளனர். பழங்குடி மக்கள் பாறைகளில் ஓவியங்களை செதுக்கி கலைகளை வளர்த்துள்னர். ஏமிலி கிங்வாரோய், கோர்டன் பென்னெட் போன்ற பழங்குடியின மக்களை சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர்கள் ஆவார். ஆங்கிலேய வருகையின் பின் மொழி, கலாசராங்களில் கணிசமான மாற்றத்தை ஏறபடுத்தியது. ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கிரிகெட் விளையாட்டே இந்த நாட்டின் தேசிய விளையாட்டாக உள்ளது. அதே நேரம் ரக்பி இந்த நாட்டின் தனித்துவமான அதிகளவான ரசிகர்களை கொண்ட விளையாட்டாகும். பாட்ரிக் வைட், மார்க்ஸ் சூசாக், டிம்பர் வின்ஸ்ட் ஸ்லேட் என்பன உலகப் புகழ் பெற்ற இலக்கிய படைப்புக்கள் ஆகும். டிட்ஜெரிடு என்ற வாத்தியம் ஆஸ்திரேலிய இசையில் முக்கிய பங்கை பெறுகிறது. பாப் இசை, ராக் மற்றும் களக்கூத்தை இங்குள்ள மக்கள் பெரிதும் விரும்பி ரசிக்கின்றனர்.
இவர்களின் சிறந்த கட்டடக் கலைக்கு உதாரணமாக சிட்னி ஓபரா ஹவுஸ் கட்டடம் காணப்படுகிறது. இங்கு பல நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியதால் பல நாடுகளின் தனித்துவமான உணவுப் பழக்கங்களை இங்கு காணமுடியும். குறிப்பாக சீன, இத்தாலி, இந்திய நாடுகளின் உணவுகளை அதிகமாக காணலாம். எனினும் பூர்விக மக்களின் உணவு பழக்கங்களில் கங்காரு மாமிசம், வட்டல சாகுபடி போன்றன முக்கிய இடம் பெறுகிறது. இங்கு வாழும் மக்களில் 64 வீதமானவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர். 19 வீதமானவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றுவதில்லை. 6 இல் இருந்து 15 வயது வரை கட்டாய கல்வி நடைமுறையில் உள்ளது. இங்குள்ள மக்களின் படிப்பறிவு வீதம் 99% ஆகும். ஆஸ்திரேலியர்கள் பெரும்பாலும் இயற்கையுடன் இணைந்தே வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
உலகின் முக்கியமான பொருளாதாரங்களில் ஒன்றாகும். இங்கு மேற்குலக நாடுகளை போல கலப்பு பொருளாதாரம் நிலவுகிறது. மக்கள் வசதியாக வாழ கூடிய முதல் பத்து நகரங்களில் மெல்பேர்ண், பேர்த், அடிலெய்ட் போன்ற மூன்று ஆஸ்திரேலிய நகரங்கள் இடம்பெறுகின்றன. இங்கு சுரங்க துறை மொத்த பொருளாதாரத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது. சுரங்க தொழிலில் ஈடுபடுவதால் அதிகளவான கார்பன் வெளிவருகிறது. 2050 நெட் ஜீரோ டார்கெட் எனும் திட்டம் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் திடமான பசுமை பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகும். இரும்புதாது, நிலக்கரி, உலோகங்கள் என்பன முக்கிய ஏற்றுமதி பொருட்களாகும். ஆஸ்திரேலியாவில் இருந்து கிடைக்கும் இரும்புதாது மற்றும் நிலக்கரிக்கு சீனாவில் கேள்வி அதிகம். ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா என்பன முக்கிய வர்த்தக பங்காளிகள் ஆகும். தொழில்நுட்ப துறை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. றோபோடிக்ஸ், ஏரோஸ்பேஸ் போன்ற பிரிவுகளில் முதன்மை வகிக்கிறது. வேளாண்மையிலும் தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த விளைவுகளை பெற முடிகிறது. சுற்றுலா துறை வருடாவருடம் வருவாய் அதிகரித்தே செல்கிறது. 2023 இல் 50 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வருமானம் பெறப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பு தற்போது முக்கிய சவாலாக மாறிவருகிறது. அதனால் குடிநீருக்கான சிக்கல்கள் தோன்றியுள்ளன.
முக்கிய சுற்றுலாத்தளங்கள் சில
சிட்னி ஹார்பர் பிரிட்ஜ்
பாண்டை பீச்
யாரா பள்ளத்தாக்கு
தாஸ்மானியா
கங்காரு தீவு
அவுட்பேக்
உலுரு
Comments
Post a Comment