Posts

Showing posts from December, 2024

குகேஸ்: இளம் சதுரங்க சாம்பியன்

கடந்த சில தினங்களாக நாம் அதிகம் கேள்விபட்ட பெயர்களில் ஒன்றுதான் குகேஸ். “அனைவருக்கும் இருப்பது போல எனக்கும் பதட்டம் உண்டு. ஆனால், நான் மிகவும் பதட்டமானதில்லை. பொதுவாக ஆடும்போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.” இது சதுரங்க விளையாட்டில் மிகப்பெரும் வரலாற்றை படைத்துள்ள ஒருவருடைய வார்த்தைகள். சதுரங்க வீரர்களின் பொதுவான கனவாக இருப்பது ஒரு தடவையாவது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பதாகும். ஆனால் அதை இளம் வயதிலேயே அடைந்து காட்டியுள்ளார் 18 வயதான குகேஸ், தமிழக வீரரான இவர், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, உலகில் மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சாம்பியன்ஸிப் போட்டியின் இளம் போட்டியாளராகத் தேர்வான அவர், தற்போது சாம்பியன் பட்டம் வெல்லும் இளம் செஸ் வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார். உலக சாம்பியன்ஸிப் பட்டத்தை வென்றால் என்ன செய்வீர்கள் என்று சிங்கப்பூரில் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, "எனக்குத் தெரியாது, நான் முதலில் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று பதிலளித்தார் குகேஸ். இந்த மகத்தான சாதனைக்கு பின் அவரிடம் இருந்த அர்ப்பணிப்புக்கள், தியா...

உலகின் மிகச்சிறிய நாடுகள்

நாடு என்றால் அது பல்லின மக்கள் அதிகமாக வாழ்கின்ற மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் என்றே நாம் பொதுவாக கருதுவோம். எனினும், மிகவும் சிறிய நிலப்பரப்பில் அமைந்த அரசுரிமை பெற்ற நாடுகளும் உலகில் உள்ளன. ஐரோப்பா, கரீபியன் தீவுகள் மற்றும் பசுபிக் பிராந்தியத்திலேயே இவ்வாறான நாடுகள் பெருபாலும் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை 400 சதுர கிலோமீற்றரிலும் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டவையாகும். அந்த வகையில், உலகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில், நிலப்பரப்பில் மிகவும் சிறிய நாடுகளாக கருதப்படும் பத்து நாடுகள் பற்றிய விபரம் இங்கே பார்ப்போம். மால்ட்டா  மால்ட்டா இன் பரப்பளவு 316 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். இந்த நாடு, பிரதானமாக கோஸோ, கொமினோ மற்றும் மால்ட்டா என்ற மூன்று தீவுகளை உள்ளடக்கியுள்ளது. மால்ட்டா தீவானது ஏனையவற்றை விட விசாலமானது. இது மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். இங்கு பிரதானமான மொழி மால்ட்டீஸ் ஆகும். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பண்டைய வரலாற்றினைக் கொண்ட மால்ட்டா, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்த ஒரு நாடாகும். இங்கு நிலவும் வெப்பமான காலநிலையும் அழகிய கடற்கரையும் சுற்றுல...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஜான் பெர்கின்ஸின் சுயசரிதை என்றே சொல்லாம். இது 2004 இல் ஆங்கிலத்தில் ஜான் பெர்கின்ஸால் வெளியிடப்பட்டது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதால் பல நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்தது. இதற்கு இருந்த வரவேற்பின் காரணமாக 2012 இல் இரா.முருகவேள் இதை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழிலும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெர்கின்ஸின் சொந்த அனுபவங்களே ஆகும். அவர் ஒரு பொருளாதார அடியாளாக தனது வாழ்பனுபவத்தை பகிர்ந்துள்ளார். பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்களே பொருளாதார அடியாட்கள் ஆவார். இந்த நூலில் கூறப்படுவது அவ்வாறான ஒரு அடியாளான ஜான் பெர்கின்ஸின் வாக்குமூலமே ஆகும். இதில் அமெரிக்கா உலக நாடுகளின் மீது எவ்வாறு கொடூரமாக செயற்பட்டது என்பதை ஜான் பெர்கின்ஸ் கூற விளைகிறார். உ...

சீனா : உலகின் பெரிய நாடு

சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும்.  உலகில் ரஸ்யா, கனடா க்கு அடுத்து பரப்பளவில் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிலையான உறுப்புரிமையை கொண்ட நாடு. இந்நாட்டின் தலைநகரம் பிஜிங் ஆகும். சாங்காய் இதன் பெரிய நகரம் ஆகும். உலகில் தோன்றிய பழமைவாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்று. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. சீனர்கள் தங்கள் புதுவருடத்தை மற்ற நாடுகளை போல் அல்லாமல் ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 20 ற்குள் வரும் நாடகளில் கொண்டாடப்படுகிறது. இவர்கள் புதுவருடத்தை 15 நாட்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் புரட்சியின் அடையாளமாக இருக்கும் சிவப்பு நிறத்தை சீன மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் தேசிய கொடியில் சிவப்பு நிறத்தை பிரதானப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த சிவப்பு நிறத்தை மகிழ்ச்சியின் அடையாளமாக கொண்டுள்ளனர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 56 பாரம்பரிய இடங்கள் இங்கு காணப்படுகின்றன. இத்தாலிக்கு அடுத்து அதிகளவான பாரம்பரிய இடங்களை கொண்ட நாடு சீனா தான். முதியோர் ந...

சுவையான மருத்துவ குணமும் கொண்ட மாம்பழம்

பழங்களின் அரசன் என அடைமொழி கொண்டு அழைக்கப்படும் பழம் தான் மாம்பழம். இலகுவில் நாம் பெறக்கூடிய பழங்களில் மாம்பழமும் ஓன்று. உலகில் அதிகளவான மக்களால் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் முதன்மையானது மாம்பழமாகும். சித்திரை வைகாசி மாதங்களில் பொதுவாக மாம்பழம் பெருமளவில் கிடைக்கின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் பெருமளவில் மாமரங்களை நாம் காணலாம். தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள முக்கனிகளில் ஒன்று தான் இந்த மாம்பழம். இந்த பழம் இந்தியா, பாக்கிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய பழமாகவும் உள்ளது. மாம்பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாக உள்ளது. மாமரம் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது. இந்த மாமரங்களின் தோற்றம் இந்தியாவில் இருந்து ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த மாம்பழங்கள் புராண கதைகளில் இருந்து தற்போது வரும் சினிமா பாடல்கள், கவிதைகள் வரை இடம்பெற்றிருப்பது மாம்பழத்திற்கு உண்டான சிறப்பை எடுத்துகூறுகிறது. இன்று உலகம் முழுவதும் பல வகையான இன மாமரங்கள் காணப்படுகின்றன. இந்தியாவின் சேலத்து மாம்பழத்திற்கும் ஈழத்தின் யாழ்ப்பாண மாம்பழத்திற்கும் ஒரு தனி மவுசு எப்பொழுதுமே உண்...

சாண்டில்யனின் ராஜ பேரிகை

சாண்டில்யனின் மாபெரும் படைப்புகளில் ஒன்று தான் சரித்திர நாவலான ராஜ பேரிகை. அரச குலத்தாரின் வருகையையோ அல்லது எதிரிகளின் வரவையோ குறிப்பதாக எழுப்பப்படும் ஒலியே ராஜ பேரிகையின் சப்தம் ஆகும். கல்கியின் நாவல்களை போல இவருடைய நாவல்களுக்கும் தனியான ரசிகப் பட்டாளமே உண்டு. இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலின் கதைக்களம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேய காலணித்துவத்தில் இந்திய அடிமையாக இருந்த சமயத்தில் நடைபெறுவது போல் கூறப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கோடு வந்த ஆங்கிலேயர்கள் எவ்வாறு பாரதத்தை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்பதை பல வரலாற்று சம்பவங்களுடன் கலந்து விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆங்கிலேய படையெடுப்பினையும் அவர்களின் தந்திரங்களையும் தனது கற்பனையையும் கலந்து சுவையாக சொல்லியுள்ளார் ஆசிரியர். வரலாற்று தகவல்கள் ஏராளமாக கொட்டி கிடக்கிறது இந்த நூலில். இந்த கதைக் களத்தில் நட்பு, காதல், வீரம் துரோகம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டுவந்துள்ளார். இந்த நாவலும் ஆரம்பத்தில் குமுதத்தில் இரண்டு வருடங்களாக தொடர்கதையாக...

நியூசிலாந்து : பூமியன் சொர்க்கம்

இயற்கை அன்னiயின் அரவணைப்பின் செழித்து விளங்கும் நாடுகளில் நியூசிலாந்து முதன்மையானது. மனிதன் கடைசியாக குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்று. தெற்கு பசுபிக் மகாசமுத்திரத்தில் அமைந்துள்ள தீவுதான் இந்த நியூசிலாந்து. நீர்நிலைகள், மலைகள் போன்ற இயற்கை வளங்களால் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. அத்துடன் இங்குள்ள மக்கள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாதணிகள் அணியாமலே நடமாடுகின்றனர். அதற்கு காரணம் அங்குள்ள வீதிகள் எப்பொழுதுமே சுத்தமாகவே இருக்கும். அத்துடன் அங்குள்ள காலநிலையும் அதற்கு ஏதுவானதாக உள்ளது. அங்குள்ளவர்கள் பாதணி அணியாமல் செல்வதை மிகவும் விரும்புகின்றனர். இங்கு பொலீத்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இது மற்ற உலக நாடுகளில் இருந்து தூரமாக உள்ளபடியால் இங்கு பாம்பு, நூளம்பு போன்ற உயிரனங்கள் இல்லை. ஆனாலும் இந்த நாட்டுக்கே உரிய சில உயிரினங்கள் உள்ளன. உலகின் அமைதியான இரண்டாவது நாடாக நியூசிலாந்து காணப்படுகிறது. இங்குள்ள மக்களின் சாராசரி ஆயுட்காலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். ஆண், பெண் வேறுபாடுகள் இங்கு இல்லை. உலகில் பெண்களுக்கு முதலில...

நமக்காகவே தன்னை அர்ப்பணிக்கும் தென்னை

கடல் வழியாக இலங்கைக்கு வரும் ஒரு பயணிக்கு முதலில் தெரிவது வானை முட்டுமளவுக்கு  உயர்ந்து வளர்ந்திருக்கும் தென்னை மரங்கள் நிறைந்த கரையோரப் பகுதியாகும். இலங்கை, இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் தென்னை அதிகமாக வளர்கின்றது. எமது நாட்டின் பணப்பயிர்களில் தென்னையும் ஒன்று. அந்தவகையில் எமது நாட்டில் தென்னைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான், தற்போது தெங்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இலங்கை மக்களைப் பாரியளவில் பாதித்துள்ளது. முழு இலங்கையினதும் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2700 மில்லியனுக்கும் 2900 மில்லியனுக்கும் இடைப்பட்டதாகும். இவற்றில் 80மூ உள்நாட்டுப் பாவனைக்கு உதவுகிறது. இலங்கையரின் உணவில் அவர்களுக்கான 10% புரதத்தையும், 22ம% ஊட்டச்சத்தையும் கொழுப்பையும் தேங்காயே வழங்குகின்றது. இவ்வாறாக ஓர் இலங்கையர் வருடத்திற்கு உணவில் 90 தேங்காய்களையும் ஐந்து போத்தல்கள் எண்ணெய்யையும் சேர்த்துக்கொள்வதாகக் கூறப்படுகின்றது. தேங்காய் மாத்திரமன்றி; தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் அன்றாட தேவைகளுக்காக ஏதோ ஒருவகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, வீட்டுத்தோட்டத்தின் சிறியதோர் இடத்...