நியூசிலாந்து : பூமியன் சொர்க்கம்

இயற்கை அன்னiயின் அரவணைப்பின் செழித்து விளங்கும் நாடுகளில் நியூசிலாந்து முதன்மையானது. மனிதன் கடைசியாக குடியேறிய நாடுகளில் இதுவும் ஒன்று. தெற்கு பசுபிக் மகாசமுத்திரத்தில் அமைந்துள்ள தீவுதான் இந்த நியூசிலாந்து. நீர்நிலைகள், மலைகள் போன்ற இயற்கை வளங்களால் செழித்து வளர்ந்து காணப்படுகிறது. அத்துடன் இங்குள்ள மக்கள் இயற்கையோடு இணைந்தே வாழ்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாதணிகள் அணியாமலே நடமாடுகின்றனர். அதற்கு காரணம் அங்குள்ள வீதிகள் எப்பொழுதுமே சுத்தமாகவே இருக்கும். அத்துடன் அங்குள்ள காலநிலையும் அதற்கு ஏதுவானதாக உள்ளது. அங்குள்ளவர்கள் பாதணி அணியாமல் செல்வதை மிகவும் விரும்புகின்றனர். இங்கு பொலீத்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இது மற்ற உலக நாடுகளில் இருந்து தூரமாக உள்ளபடியால் இங்கு பாம்பு, நூளம்பு போன்ற உயிரனங்கள் இல்லை. ஆனாலும் இந்த நாட்டுக்கே உரிய சில உயிரினங்கள் உள்ளன. உலகின் அமைதியான இரண்டாவது நாடாக நியூசிலாந்து காணப்படுகிறது. இங்குள்ள மக்களின் சாராசரி ஆயுட்காலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலத்தை விட அதிகமாகும். ஆண், பெண் வேறுபாடுகள் இங்கு இல்லை. உலகில் பெண்களுக்கு முதலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய நாடு நியூசிலாந்து. இங்குள்ள மக்கள் தங்களுக்கு தேவையில்லாத பாவிக்ககூடிய நிலையில் உள்ள பொருட்களை மக்கள் எடுத்துச் செல்லகூடிய வகையில் பொதுவெளிகளில் வைத்துவிடுவார்கள். யாரேனும் அந்த பொருட்களின் தேவையிருந்தால் எடுத்துச் செல்லலாம்.


தலைநகரம் - வெலிங்டன்

பிரதமர் - கிறிஸ் ஹிப்கின்ஸ் 

அரசாங்கம் - நடாளுமன்ற மக்களாட்சி 

தேசிய தினம் - 06 மாசி 

நாணயம் - நியூசிலாந்து டாலர் 

நேர வலயம் - +12 

இணையக் குறி - .nz

தொலைபேசி குறி - +64

கல்வி அறிவு வீதம் - 99%

மக்கள் தொகை – 52 லட்சம்

முக்கிய நகரங்கள் - ஆக்லாந்து, வெலிங்டன், கிரைஸ்ட்


புவியியல் அமைவிடம்

நியூசிலாந்து தெற்கு பசுபிக் மகாசமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவுக் கூட்ட நாடாகும். பசுபிக் மற்றும் இந்திய-ஆஸ்திரேலிய தட்டுக்கள் சந்திக்கும் புள்ளியில் அமைந்துள்ளதால் அதிக நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புக்கள் ஏற்படுகின்றது. இது இரண்டு முக்கிய தீவுகளான வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவுகளை உள்ளடக்கியுள்ளது. நாட்டின் பெருந்தொகையான மக்கள் தெற்கு தீவிலேயே வசிக்கின்றனர். 22 கிலோமீட்டர் நீளமான குக் நீரிணை வடக்கு, தெற்கு தீவுகளை பிரிக்கிறது. வடக்கு தீவு சூடான நிலப்பகுதிகளை கொண்ட மவோரி கலாசாரம் நிறைந்தது. தெற்கு தீவு பனிமலைகள், நீர்வீழ்ச்சிகளால் பிரசித்தமானது. நியூசிலாந்தில் எப்பொழுதுமே மிதமான காலநிலையே நிலவுகிறது. இங்கு நீண்ட குளிர்காலமும், குறுகிய கோடை காலமும் காணப்படுகிறது.


வரலாறு

நியூசிலாந்தில் 12 ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்திய பசுபிக் தீவுகளில் இருந்து பொலினீசியர்கள் குடியேறி தனித்துவமான மாவோரி கலாசாரத்தை பேணி வந்தனர். இவர்களே நியூசிலாந்தின் முதன்மை குடிகள் ஆவார். அவர்கள் நியூசிலாந்தை மாவோரி மொழியில் ஆடோ ஆரோ என அழைத்தனர். 1642 இல் தான் முதன்முதலாக அபேல் தஸ்மான் எனும் ஐரோபியர் நாடுகாண் பயணத்தின் விளைவாக நியூசிலாந்தை கண்டுபிடித்தார். இவர் அங்கு வந்த சமயம் பூர்வ குடிகளாக இருந்த மாவோரியர்களுடன் மோதலில் ஈடுபட்டார். 4 ஐரோப்பிய வீரர்கள் கொல்லப்படவே தஸமான் அங்கிருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அதன்பின் இரண்டாவது தடவையாக 1769 இல் கேப்டன் ஜேம்ஸ் குக் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளை ஆராய்ந்து சென்றார். இவர் மவோரி மக்களுடன் சுமூகமான போக்கை கடைப்பிடித்தார். குக்கை தொடர்ந்து அவர வரைந்த வரைபடத்தை பயன்படுத்தி பல ஐரோப்பியர்கள் இங்கு வேட்டையாடுதல் வணிகம் போன்ற நோக்கங்களுக்காக வந்து சென்றனர். இதற்கு பின் மவோரி மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சியை சந்தித்தது. அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த புதுபுது நோய்கள் ஆகும். 1835 இல் சார்லஸ் டி தியேரி பிரெஞ்ச் குடியேற்றத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தபோது அங்கிருந்த பழங்குடியினர் நியூசிலாந்தின் விடுதலையை வேண்டி தமக்கு பாதுகாப்பு அழிக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் மன்னரான நான்காம் வில்லியத்தை கேட்டுக்கொண்டனர். இந்த சிக்கலை தீர்க்க பிரித்தானிய அரசு நியூசிலாந்தை தம்வசப்படுத்தியது. அத்துடன் மாவோரி இன மக்களின் நிலம் மற்றும் உரிமைகளை காப்பதாக வைட்டாங்கி உடன்படிக்கை ஒன்றும் கைச்சாதிடப்பட்டது. பின்னர் இந்த உடன்படிக்கை மீறப்பட்டதுடன் மோதல்களும் ஆரம்பித்தது. 1845 தொடக்கம் 1872 வரையான காலப்பகுதியில் மாவோரி மக்கள் பிரித்தானிய குடியேற்றங்களுக்கு எதிராகவும் தங்கள் நிலங்களை பாதுகாக்கவும் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான போராட்டங்களை நடாத்தினார். இதில் பெருமளவான மவோரி இன மக்கள் கொல்லப்பட்டனர். 1852 இல் நியூசிலாந்து பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் தனது முதல் நாடாளுமன்றத்தை அமைத்தது. 1856 இல் உள்நாட்டு விவகாரங்களுக்கான சுயாட்சி உரிமை கிடைத்தது. வடக்கு மற்றும் தெற்கு தீவுகளின் நடுவில் வெலிங்டன் இருந்ததால் அந்நகரை தலைநகராக தெரிவு செய்தனர். 1865 இல் முதன்முதலாக வெலிங்டனில் நாடாளுமன்றம் கூடியது. 1893 இல் உலகில் முதன்முதலாக பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இது உலகளவில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1907 இல் ஏழாம் எட்வர்ட் மன்னர் நியூசிலாந்தை பிரித்தானிய பேரரசின் கீழ் மேலாட்சி அரச முறையை அறிவித்தார். 1947 இல் வெஸ்ட்மினிஸ்டர் சட்டம் இயற்றப்பட்டு நியூசிலாந்து மக்களின் அனுமதியின்றி பிரித்தானியா நியூசிலாந்து தொடர்பான எந்த தீர்மானமும் எடுக்க முடியாது என தீர்மானிக்கபட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஈடுபட்டதன் விளைவாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்த தொழில் கட்சி பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பியது. 1970 களில் மவோரி உரிமை இயக்கங்கள் பல தோற்றம் பெற்றன. இதன் மூலம் அவர்கள் இழந்த நில உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொள்ளகூடிய வழிகளை அரசாங்கம் உருவாக்கியது. 1987 இல் மவோரி மொழி நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. 1990 கள் முதல் நியூசிலாந்து சர்வதேச சுற்றுச்சூழல் சுதந்திர நாடாக வலுப்பெற்றது. நியூசிலாந்து பழங்குடியின மக்களுக்கும் சம உரிமை கொடுத்து சமத்துவத்திற்கு முன்னுதாரணமான ஒரு நாடாக திகழ்கிறது. இதுவே அவர்களை உலக அரங்கில் முக்கிய இடத்திற்கு வர காரணமாக உள்ளது.


அரசியல்

நியூசிலாந்தில் நாடாளுமன்ற முறையுடன் கூடிய அரசியல் சட்ட முடியாட்சி காணப்படுகிறது. மூன்றாம் சார்ள்ஸ் தற்போதைய அரசர் ஆவார். அரசரின் அதிகாரங்களை பிரதிநிதிபடுத்த ஆளுனர் நியமிக்கப்படுவார். ஆரசாங்கத்தின் தலைவராக பிரதமர் இருப்பார். மவோரி இன மக்களுக்கும் சமனான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஒரு மண்டபம் கொண்ட சட்டமன்றம் ஆகும். இதற்கு 120 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார். ஆதில் 72 இடங்கள் நேரடியாகவும், 48 இடங்கள் கட்சி வாக்குகளுக்கு அமைய வழங்கப்படும். MMP முறையில் தேர்தல்கள் நடைபெறுவதால் பெரும்பாலும் கூட்டணி மூலமே ஆட்சி அமைக்கமுடிகிறது. அரசாங்கம் கல்வி, சுகாதாரம் போன்ற விடயங்களில் எப்பொழுதும் அதிக கவனம் செலுத்துகிறது. லேபர் பார்டி, கிரீன் பார்டி, அக்ட் நியூசிலாந்து என்பன முக்கியமான கட்சிகளாகும். நியூசிலாந்து உலகின் மிகவும் நிலைத்தன்மை உடைய மற்றும் நன்கு அரசாளப்படும் நாடுகளில் முதன்மையானதாக இருக்கிறது. மக்களாட்சி அமைப்புகளின் வலிமை தரப்படுத்தலில் நியூசிலாந்து ஐந்தாவதாக உள்ளது. அதற்கு காரணம் அரசின் தெளிவுத் தன்மையும், ஊழலற்ற அரசும் ஆகும். இங்கு நடைபெறும் தேர்தல்களில் சராசரியாக 79 வீதமான மக்கள் வாக்களிக்கின்றனர்.


கலாச்சாரம் மற்றும் பண்பாடு

மவோரி இன மக்கள் நியூசிலாந்தின் பூர்விக குடிமக்களாக கருதப்படுகின்றனர். அதனால் அவர்களின் கலாசாரமே இந்த நாட்டின் அடையளமாக கருதப்படுகிறது. மவோரி இன மக்கள் வாய்மொழி மூல புராண கதைகளை கொண்டுள்ளனர். அதில் வரும் மாவி என்ற வீரர் மிகவும் பிரபல்யமானவர். மரப்பணிகள், கற்களை செதுக்கும் கலைகள் மற்றும் உடல்களுக்கு வர்ணம் பூசுதல் என்பன இவர்களின் பழக்கவழக்கங்கள் ஆகும். தற்போது ஐரோப்பிய கலாசாரத்திற்குள் வந்தாலும் முகங்களில் ஓவியங்களை வரையும் வழக்கம் இன்னமும் தொடர்கிறது. மவோரி மொழி அரசியல், கல்வி என்பவற்றில் பரந்த அளவில் பயன்படுகிறது. மவோரி போராட்ட நடனமும் பிரசித்தமானது. இதனை நாம் கிரிகெட் மற்றும் ரக்பி போட்டிகளின் போது ரசிகர்களால் ஆடப்படுவதை பார்க்கலாம். ஐரோப்பிய கலாசாரங்கள் நியூசிலாந்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உணவு முறைகள், ஆடை, இசை, நடனம் போன்றன நியூசிலாந்தின் பாரம்பரிய பண்பாடுகளுடன் புகுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் அழகான மற்றும் சமத்துவமான வாழ்க்கை முறையை கொண்டுள்ளனர். த லாட்ஸ் ஒப் த ரிங் என்ற ஓஸ்கார் விருது பெற்ற திரைப்படம் இங்கேயே உருவாக்கப்பட்டது. இது தவிர மவோரி இசைகள் பெரும்பாலும் உலகளவில் பகழ் பெற்றவை. ஹாங்கி எனும் நிலத்தினால் உணவை வேக வைக்கும் முறை இங்கு பிரபல்யமானது. பால் மற்றும் இறைச்சி அடிப்படையிலான உணவுகள் முக்கிய இடம்பெறுகின்றன. இவர்கள் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்த நாளை வைட்டாங்கி நாள் என்று கொண்டாடுகிறார்கள். மட்டாரிகி எனும் புத்தாண்டு நாளை தற்போது தேசிய விடுமுறை தினமாக கொண்டாடுகிறார்கள். 


பொருளாதாரம் 

நியூசிலாந்து நவீன, வளரந்த பொருளாதாரத்தை கொண்ட நாடு. பல முண்னனி நாடுகளை விட தனிநபர் வருமானம் இங்கு அதிகமாகும். திமிங்கல வேட்டை, பார்மியம், தங்கம் கவுரி பிசின் மற்றும் உள்நாட்டு வெட்டுமரம் தொழில்களும் முதன்மையானவையாக இருந்துள்ளன. 1880 களில் குளிரூட்டப்பட்ட கப்பல்களின் வருகையின் பின் இறைச்சியும், பால்பொருட்களும் பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. தற்போது நியூசிலாந்தின் முக்கிய ஏற்றுமதி வேளாண் பொருட்களில் தங்கியுள்ளது. இது மொத்த தேசிய உற்பத்தியில் 24 வீதமாகும். ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, அவுஸ்திரேலியா என்பன முக்கிய ஏற்றுமதி பங்காளி நாடுகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டிற்கு பின் கம்பளியும் முக்கிய வேளாண் ஏற்றுமதி பொருளாக இருந்தது. தற்போது உலக சந்தையில் இதன் விலை குறைவடைந்து பால் பொருட்களின் ஏற்றுமதி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சுற்றுலாத் துறை நியூசிலாந்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கை வகிக்கிறது. மவோரி கலாசாரம், மலைகள் என்பன சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றன. 80 வீதமான மின்சாரம் பசுமை ஆற்றலில்(காற்று, தூயநீர், சூரிய ஒளி) இருந்து பெறப்படுகிறது. பருவநிலை மாற்றம் இங்குள்ள பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. காலநிலை மாற்றங்களால் கால்நடைகளை பெரிதும் பாதிக்கிறது. மழைவீழ்ச்சி குறைவதால் விவசாய உற்பத்தி பாதிப்படைகிறது. ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விலைபோட்டிகள் ஏற்பட்டுள்ளமையானது நியூசிலாந்தின் ஏற்றுமதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பசுமை வளர்ச்சியும், புதிய தொழில்துறையும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.


முக்கிய சுற்றுலாத்தளங்கள் சில

மில்போர்ட் சவுண்ட்

ரோடரோவா

குயின்ஸ்டவுன்

வைத்தொமோ குகைகள்

கெய்குரா

வனாகா

டுனிடின்


Comments

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்