Posts

Showing posts with the label book Review

ஹிட்லரின் எனது போராட்டம்

உலக சரித்திரத்தின் போக்கையே தன் பக்கம் திருப்பியவர், ஒரு இனத்தையே தனியொருவனாக நின்று அழித்துக் காட்டியவர், உலக வல்லரசுகள் பல எதிர்த்தபோதும் கூட தனது கொள்கைளில் இருந்து சிறிதும் நெறி தவறாது நின்றவர் அடோல்ப் ஹிட்லர். உலக நாடுகள் அனைத்தையும் ஒரு மகா யுத்தத்தில் கொண்டுவந்து நிறுத்திய ஹிட்லர் எதனை எதிர்பார்த்து இந்த யுத்தத்தை ஆரம்பித்தார்? அவரின் கொள்கைகள் தான் என்ன? இவ்வாறான பல கேள்விகளுக்கான பதிலை சொல்லும் புத்தகம் தான் மெயின் கேம்ப். இந்தப் புத்தகம் ஹிட்லரின் வரலாறை கூறவில்லை. இதில் அவரின் கொள்கைகள், ஜேர்மன் சோசலிசம், முதலாம் உலக யுத்தம் பற்றிய அவரின் கண்ணோட்டங்கள் போன்ற கருத்துக்களை கூறுகின்றன. மெயின் கேம்ப் இதன் ஜெர்மன் மொழி உச்சரிப்பு மைன் கம்ப் (mein kampf) எனது போராட்டம் அல்லது எனது யுத்தம் என்று பொருள்படும் தலைப்பில் தன் சுயசரிதை மற்றும் தேசிய பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கம் இரண்டையும் உள்ளடக்கி அடோல்ப் ஹிட்லர் எழுதிய புத்தகமே மெயின் கேம்ப். இது இரண்டு தொகுப்புகளாக வெளியிடப்பட்டது. முதல் தொகுப்பு 1925 லும், இரண்டாம் தொகுப்பு 1926-ம் ஆண்டிலும் வெளியிடப்பட்டது. 1925 லிருந்து 19...

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஜான் பெர்கின்ஸின் சுயசரிதை என்றே சொல்லாம். இது 2004 இல் ஆங்கிலத்தில் ஜான் பெர்கின்ஸால் வெளியிடப்பட்டது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டுவதால் பல நாடுகளில் விற்பனையில் சாதனை படைத்தது. இதற்கு இருந்த வரவேற்பின் காரணமாக 2012 இல் இரா.முருகவேள் இதை தமிழில் மொழி பெயர்த்தார். தமிழிலும் இந்த புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் பெர்கின்ஸின் சொந்த அனுபவங்களே ஆகும். அவர் ஒரு பொருளாதார அடியாளாக தனது வாழ்பனுபவத்தை பகிர்ந்துள்ளார். பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்களே பொருளாதார அடியாட்கள் ஆவார். இந்த நூலில் கூறப்படுவது அவ்வாறான ஒரு அடியாளான ஜான் பெர்கின்ஸின் வாக்குமூலமே ஆகும். இதில் அமெரிக்கா உலக நாடுகளின் மீது எவ்வாறு கொடூரமாக செயற்பட்டது என்பதை ஜான் பெர்கின்ஸ் கூற விளைகிறார். உ...

சாண்டில்யனின் ராஜ பேரிகை

சாண்டில்யனின் மாபெரும் படைப்புகளில் ஒன்று தான் சரித்திர நாவலான ராஜ பேரிகை. அரச குலத்தாரின் வருகையையோ அல்லது எதிரிகளின் வரவையோ குறிப்பதாக எழுப்பப்படும் ஒலியே ராஜ பேரிகையின் சப்தம் ஆகும். கல்கியின் நாவல்களை போல இவருடைய நாவல்களுக்கும் தனியான ரசிகப் பட்டாளமே உண்டு. இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலின் கதைக்களம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேய காலணித்துவத்தில் இந்திய அடிமையாக இருந்த சமயத்தில் நடைபெறுவது போல் கூறப்பட்டுள்ளது. வர்த்தக நோக்கோடு வந்த ஆங்கிலேயர்கள் எவ்வாறு பாரதத்தை தமது கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்பதை பல வரலாற்று சம்பவங்களுடன் கலந்து விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஆங்கிலேய படையெடுப்பினையும் அவர்களின் தந்திரங்களையும் தனது கற்பனையையும் கலந்து சுவையாக சொல்லியுள்ளார் ஆசிரியர். வரலாற்று தகவல்கள் ஏராளமாக கொட்டி கிடக்கிறது இந்த நூலில். இந்த கதைக் களத்தில் நட்பு, காதல், வீரம் துரோகம் என அனைத்தையும் ஒருங்கே கொண்டுவந்துள்ளார். இந்த நாவலும் ஆரம்பத்தில் குமுதத்தில் இரண்டு வருடங்களாக தொடர்கதையாக...

சேப்பியன்ஸ் - மனித குலத்தின் சுருக்கமான வரலாறு

இஸ்ரேலை சேர்ந்த வரலாற்று முனைவர் யுவால் நேவா ஹராரி உலக வரலாறுகள் குறித்து பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார். சேப்பியன்ஸ் நூலில் மனித வளர்ச்சியும் அதன் வரலாற்றையும் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த நூல் 33 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதே சமயம் பத்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஒன்றுமில்லாத சாதாரண உயிரனமாக இருந்த சேப்பியன்ஸ் எவ்வாறு இந்த உலகையே ஆட்டி வைக்கும் சக்தியாக மாறினான் என்பதை இந்த நூல் தெளிவாகவும் விறுவிறுப்பாகவும் கூறுகிறது. அதேவேனை நம்மையும் சிந்திக்க வைக்கிறது. நம்ப முடியாத பல தகவல்களையும், புரியாத விடயங்களை பாமர மக்களுக்கும் விளங்கும் படியாக எளிய உதாரணங்கள் மூலம் ஹாரரி விளக்கியுள்ளார். நம்முள் இருக்கும் உலகம் சார்ந்தும், மனித குலம் சார்ந்தும் இருக்கும் பல கேள்விகளுக்கு விடை காணும் நூலே சேப்பியன்ஸ். குரங்கில் இருந்து வந்த மனிதன் எவ்வாறு இந்த உலகை தன் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்தான் என்பதை மிகச் சுருக்கமாக ஒவ்வொரு படிநிலைகளை தெளிவாக கூறுவதே இந்த நூல். அறிவு புரட்சி, வேளாண் புரட்சி, மனித குல ஒருங்கிணைப்பு மற்றும...

த டாவின்சி கோட்

2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத் துப்பறிவுப் புனைவு நாவலாகும். இவர் த்ரில்லர் வகை நாவல்களை எழுவதில் கைதேர்ந்தவர். இவருடைய நாவல்கள் அனைத்துமே பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் விற்பனையாகி வருகிறது. இவருடைய நாவல்களில் அறிவியல், கலை, வரலாறு மற்றும் சமய மரபுகள் என்பன முக்கிய இடம்பெற்றிருக்கும். நுட்பமான எழுத்துக்களால் வாசகர்களை தம்வசப்படுத்திவிடுவார். இவருடைய படைப்புக்களில் த டாவின்சி கோட் மிகப்பிரபலமானது. உலகமெங்கும் இதுவரை 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப் புத்தகமாகும். அத்துடன் 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துப்பறிதல், திகில் மற்றும் அறிவியலுடன் ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் கதை நகர்கிறது. இந்நாவல் பிரவுனின் இரண்டாவது நாவலாகும். அவரது முதலாவது நாவல், 2000 ஆண்டு வெளிவந்த நாவலான ஏஞ்சல்ஸ் ரூ டெமான்ஸ் ஆகும். 2006 இல், இந்நாவல் த டாவின்சி கோட் எனும் பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. அந்த கால கட்டத்தில் அதிக வசூலை செய்த படமாகவும் டாவின்சி கோட் இருந்துள்ளது. இதுவும் திரைப்படமாக வந்தாலும் நாவல...

சிவகாமியின் சபதம்

இருபதாம் நூற்றாண்டில் கல்கி எமக்காக விட்டுச் சென்ற காவியங்கள் ஏராளம் உண்டு. அந்த வகையில் இன்று கல்கியின் பிரமாண்ட படைப்புக்களில் ஒன்றான சிவகாமியின் சபதம் என்ற நூலை பற்றி பாரக்க உள்ளோம். இந் நாவலும் கல்கி அவர்களின் ஆகச்சிறந்த படைப்புக்களில் ஒன்று ஆகும். இது 1940 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கல்கி இதழில் வெளிவந்தது. பின்னர் மக்களின் ஈர்ப்பை பெற்றதால் நாவலாக வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் அளவுக்கு சிவகாமியின் சபதம் இல்லையென்றாலும் இதுவும் மிகச் சுவாரசியமான நாவலே. பொன்னியின் செல்வனில் சோழர் கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையமாக கொண்டு காட்சிகள் மற்றும் கதாப்பத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் பல்லவ கால நிகழ்வுகளின் அடிப்படையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கால கட்டங்கள் வேறுவேறாக இருந்தாலும் கல்கி தன் எழுத்துக்களால் நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்து சென்றுவிடுகிறார். அதாவது நாமும் ஒரு சோழ தேசத்தவராகவோ அல்லது பல்லவ தேசத்தவாரகவோ மாறிவிடுகிறோம்.  பொன்னியன் செல்வனில் வந்தியத்தேவனை போல இங்கும் ஒரு கதாப்பாத்திரம் கதையை நகர்த்தி செல்கிறது. பரஞ்சோதி, பரஞ்சோதி ஆரம்பத்தில் தஞ்சையி...

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

வரலாறு நெடுகிலும் பல கவிஞர்களும், எழுத்தாளர்களும் தோன்றி தமிழுக்கு அழியா வரம் கொடுத்து வந்துள்ளனர். அந்தவகையில் கடந்த நூற்றாண்டில் நாவல்கள், சிறுகதைகள் என பல பரிமாணத்தில் தன்னை நிரூப்பித்தவர்தான் அமரர் கல்கி கிருஸ்ணமூர்த்தி. சில எழுத்தாளர்களின் மூலம் தமிழே பெருமை கொண்டுள்ளது என்று சொல்லலாம். அதற்கு ஏற்ப சில எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்களின் மூலம் காலம் கடந்தும் சாகா புகழ் பெற்று விளங்குகின்றனர். அவர்களில் ஒருவர் தான் கல்கி. கடந்த நூற்றாண்டில் பல படைப்பாளிகள் தோன்றி இருப்பினும் கல்கி அவர்களுக்கு எப்பொழுதுமே வரலாற்றில் தனி இடம் உண்டு. தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வந்த இருபதாம் நூற்றாண்டை தனது எழுத்துக்களால் கட்டிபோட்டவர். கல்கி அவர்களின் கைவண்ணத்தில் பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவற்றுள் அமரத்துவம் பெற்று விளங்குவது பொன்னியின் செல்வன் ஆகும். வருடங்கள் பல சென்றாலும் மதிப்பு குறையாத ஒரு சில புத்தகங்களில் பொன்னியின் செல்வனும் ஒன்று. எத்தனை முறை வாசித்தாலும் புதிதாக வாசிக்கும் அனுபவத்தையே கொடுக்கும். இந்நாவல் என்னதான் திரைப்படமாக வெளிவந்திருந்தாலும் புத்தகத்தின் மீதான காதலும...