சதுரங்கம்
சதுரங்கம் உலகில் உள்ள புத்திசாலிகளின் விளையாட்டு என வர்ணிக்கப்படுகிறது. இவ் விளையாட்டின் தாயகம் இந்தியாவாகும். இன்று உள்ளக விளையாட்டுகளில் சதுரங்கம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சதுரங்கத்தில் யானை, குதிரை, கோட்டை, மந்திரிகள் என்று நால்வகை சேனைகளைக் கொண்டு விளையாடப்பட்டதால் ஆரம்ப காலங்களில் இது 'சதுரங்க சேனை' என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 'சதுரங்கம்' என பெயர் பெற்றது. இதனை ஆங்கிலத்தில் “செஸ்” எனவும் அழைப்பர். விளையாட்டுகளின் அரசனாக சதுரங்கம் இருப்பதோடு, அக்காலகட்டங்களில் அரசர்களின் விளையாட்டாகவும் சதுரங்கம் இருந்துள்ளது. இதனால், 'The King of Games, The Game of Kings'' என இந்த விளையாட்டு வர்ணிக்கப்பட்டது. இந்தியாவில் சதுரங்க விளையாட்டானது, அரசர் காலத்தில் இருந்தே விளையாடப்பட்டிருக்கிறது என்பதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. கி.பி 6 ஆம் நூற்றாண்டிலேயே இச் சதுரங்கம் பாரசீகம், சீனா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. மேலும் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் தற்போது இந்த சதுரங்கம் ஆடப்படுகிறது. உலகமெங்கும் சதுரங்கம் ஆர்வமுடனும் போட்டி சிந்தனையுடனும் விளையாடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டு மனோபலத்தையும் புலமைத் திறமையையும் வலுப்படுத்துகிறது. பள்ளிகளில் மாணவர்களின் கற்பனை மற்றும் மன சிந்தனை திறனை மேம்படுத்துவதற்காக சதுரங்கத்தை அடிப்படையாக கொண்ட பயிற்சிகள் உள்ளடக்கப்படுகின்றன. உலக நாடுகளுக்கிடையே மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சதுரங்கத்தில் உலகச் சம்பியன் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டி 1886 இல் முதன்முறையாக நடந்த போது, அமெரிக்காவைச் சேர்ந்த 'வில்ஹெம் ஸ்டீனிட்ஸ்' என்பவர் வெற்றி பெற்றார். இவரே, முதலாவது உலகச் சம்பியன் என்னும் பட்டத்தைப் பெற்றவராவார். 1894 ஆம் ஆண்டுவரை மூன்று முறை தொடர்ந்தும் உலக சம்பியன் பட்டத்தை வென்ற ஒரே விளையாட்டு வீரரும் இவரேயாவார்.
சதுரங்கத்தின் விதிமுறைகள்
சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு அணி இருக்கும். கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த சேனைகள் இருக்கும். ஒரு அணியில் அரசன், அரசி அடங்கலாக 16 வீரர்கள் இருப்பார்கள். ஒரு ராஜா, ஒரு ராணி, இரண்டு குதிரை, இரண்டு மந்திரி, இரண்டு கோட்டை, எட்டு சிப்பாய்கள் என ஒரு அணியில் 16 வீரர்கள் இருப்பார்கள். ஒரு அணியின் பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொண்டு எதிரணி அணியை தோற்கடிப்பதே இவ்விளையாட்டின் நோக்கமாகும். இதில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள் அவர்களுக்கு வேறுவேறான பயணப் பாதைகள் இருக்கும்.
ராஜா – ஒரு சதுரம் எந்த திசையிலும் நகர முடியும்
ராணி – நோராகவும், சார்பாகவும் எத்தனை சதுரமும் நகர முடியும்
கோட்டை – நேராக எத்தனை சதுரமும் நகர முடியும்
மந்திரி – சார்பாக எத்தனை சதுரமும் நகர முடியும்
குதிரை – ட வடிவில் நகரும். குதிரை மட்டுமே தனது வீரர்களை தாண்டியும் செல்ல கூடியது
சிப்பாய் - முன்நோக்கி மட்டுமே ஒரு சதுரம் நகரும் ஆனாலும் முதல் நகர்வில் மட்டும் இரண்டு சதுரம் செல்லும்
சதுரங்கம் 64 சதுரங்கள் கொண்ட அட்டையில் விளையாடப்படும், இதில் ஒவ்வொரு சதுரமும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும். இரு அணிகளும் தங்களின் போராளிகளை பயன்படுத்தி ராஜாவை பாதுகாக்க வேண்டும். எந்த அணி முதலில் ராஜாவை வீழ்த்துகிறது என்பதிலேயே ஆட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது. ராஜாவால் எந்த பக்கமும் செல்ல முடியாத சந்தர்பத்தில் ஆட்டம் முடிவுக்கு வரும். இந்த ஆட்டத்தை மூன்று முக்கிய கட்டங்களாக பிரிக்கலாம். முதலவாது தொடக்க கட்டம், இதில் வீரர்களை மையத்தை நோக்கி நகர்த்தி ராஜாவை பாதுகாக்க ஆரம்பித்தல் வேண்டும். இரண்டாவது மத்திய கட்டம், இதில் எதிரியின் பாகங்களை தாக்கி நகர்வை முன்னகர்த்தல் வேண்டும். மூன்றாவது இறுதி கட்டம், இதில் பெரிய வீரர்களின் உதவியுடன் எதிரணியின் ராஜாவை தாக்குதல். ஆட்டத்தை எப்போதும் வெள்ளை அணியே தொடங்கும். விதிமுறைகளை தெளிவாக அறிந்து கொள்ளும் பழக்கம், சிறுவயதில் இது விளையாட ஆரம்பிக்கும் மாணவர்களிடையே ஆழமான சிந்தனையும், ஆராயும் திறனையும் வளர்க்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல், எதிரிகளின் ஒவ்வொரு அசைவையும் கணித்து செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த விளையாட்டு சிறந்த உதாரணமாகும்.
சதுரங்கத்தின் மகத்துவம்
சதுரங்கம், பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சிக்கு உதவும் ஒரு முக்கியமான கருவியாகவும் பார்க்கப்படுகிறது. இது மனதை அமைதிப்படுத்துகிறது. மனதின் அமைதியுடன் கூடிய ஒரு சூழ்நிலையில், எதிரிகளின் அசைவுகளை கணித்துப் பல உத்திகளை உருவாக்கி ஆடும் திறனை வழங்கும் சதுரங்கம், மனித வாழ்வில் பல தேவையான குணங்களை வளர்க்கும் ஒரு விளையாட்டு. சதுரங்கம் கல்வி துறையிலும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவும், சிந்தனை மற்றும் தீர்மானத்தை மேம்படுத்தவும், இது ஒரு பயிற்சியாக பயன்படுத்தப்படுகிறது. பல பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் சதுரங்கத்தை தங்கள் பாடத்திட்டங்களில் இணைத்துள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் பன்முக திறமைகளை வளர்க்கின்றனர். சதுரங்க விளையாடுவதன் மூலம் கிடைக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை, சாதாரண மக்களிடையே இதை மிகவும் பிரபலமாக்கியுள்ளது. சதுரங்கம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகமாக பயன்படக்கூடிய பல திறன்களை உருவாக்குகிறது. இதில் அடங்கும் முக்கியமானவை.
சதுரங்கம் மக்களின் மனதிற்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மிகுந்த கவனம், மன அமைதி, மற்றும் பெருந்திரளை எதிர்நோக்கும் திறனை இது வளர்க்கிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் மன திறனை வளர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக சதுரங்கம் விளங்குகிறது. குறிப்பாக, முடிவெடுக்கும் திறனின் மசக்கள்ளு முறைகளை (Critical Thinking Skills) உருவாக்க இது பயனளிக்கிறது. சதுரங்கம் ஒவ்வொரு வீரரின் திறனை தனித்துவமாக வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பளிக்கிறது. அதிலும் குறிப்பாக, மனதின் சுறுசுறுப்பை அதிகரிக்கவும் புதிய பாங்கான சிந்தனைகளைக் கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. பல குழந்தைகள் சதுரங்கத்தை விளையாடுவதன் மூலம் தங்களின் தர்க்கவியல் திறனை உருவாக்குகின்றனர். மனக்கட்டுபாடு அதிகரித்து சிறந்த முடிவுகளை எடுக்கவும் இந்த சதுரங்கம் உதவுகிறது. தோல்வி அடையும் மாணவர்கள் தங்கள் தோல்வியில் இருந்து எவ்வாறு மீண்டெழுவது என்று கற்றுக் கொள்ளும் அதேவேளை தங்கள் தோல்வியால் துவண்டுவிடாமல் அதிலிருந்து வெற்றிக்கான வழியை கண்டறிகின்றனர். இது சதுரங்க ஆட்டத்தில் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் இது பயனுள்ளதாக உள்ளது. முன்னோக்கு சிந்தனை அதிகரிக்கிறது. சதுரங்க ஆட்டத்தில் ஒரு நகர்வை நகர்த்தும் போது அதற்கு அடுத்தடுத்த நகர்வுகளையும் முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இதனால் மாணவர்களின் தொலைநோக்கு சிந்தனைக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது.
இன்றைய சதுரங்கத்தின் தொழில்நுட்பம்
நவீன காலத்தில், சதுரங்க விளையாட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கமும் பெரியதாக உள்ளது. இணைய தளங்களிலும் மொபைல் பயன்பாடுகளிலும் சதுரங்கத்தை விளையாடக்கூடிய வசதிகள் கிடைக்கின்றன. தொழில்நுட்பத்தின் உதவியுடன், உலகின் எந்த மூலையில் இருந்தும் போட்டிகளை நடத்தவும், புத்திசாலிகளின் திறனை சோதிக்கவும் முடிகிறது. சதுரங்கம் விளையாடும் பயிற்சிகள் இப்போது பக்கம் பக்கமாக விரிவடைந்து வருகின்றன. சதுரங்கத்தில் செயற்கை நுண்ணறிவு மிக முக்கிய பங்கை வகிக்கிறது. ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு, IBM கம்பெனியின் ‘Deep blue’ என்ற கணினி, அப்போதய உலக சதுரங்க சாம்பியன் காஸ்பாரோவை தோற்கடித்தது. இதன் பிறகு, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் சதுரங்கத்தில் கணினி கற்றலின் சக்தி வெகுவாக அதிகரித்துள்ளது. இவை விளையாட்டாளர் தனது வீழ்ச்சியைக் கண்டறிந்து அதன் மூலம் மேம்பட உதவுகின்றன. யுஐ-யை பயன்படுத்தி துல்லியமான முடிவுகள் எடுப்பதற்கு வீரர்கள் பயிற்சியளிக்கின்றனர். சதுரங்கத்திற்கான கணினி அனலிடிக்க்ஸ் மென்பொருட்களும் புதிய ரீதியான பயிற்சிகளை வழங்குகின்றன. சதுரங்க வீரர்கள் தங்களின் திறனை பரிசோதிக்கவும் மேம்படுத்தவும் தற்போது பயன்படுத்தும் ‘stockfish’ மற்றும் ‘chess.com’ போன்ற செயலிகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாகிவிட்டன.
முடிவு
தற்போதுள்ள காலத்தில் விளையாட்டுகள் மூலமும் பல சாதனைகள் செய்ய முடியும் என பலர் சாதித்து காட்டியுள்ளனர். அந்த வகையில் சதுரங்கமும் உலகளவில் பிரபல்யமாக உள்ளவேளையில் சதுரங்கம் தமிழரின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஒரு மிகப் பெரிய பொக்கிசமாகவும் உள்ளது. இது கலை மற்றும் அறிவியலின் கூட்டிணைப்பாகும். அறிவாற்றல், யோசனை, முடிவெடுக்கும் திறன், மனக்கட்டுபாடு, திட்டமிடல், தரக்க ரீதியான சிந்தனை ஆகியவற்றை வளர்க்கும் சதுரங்க விளையாட்டை நாள்தோறும் விளையாடுவதன் மூலம் நமது மனம், உடல், அறிவு ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறுகின்றன. இவ்வாறு சதுரங்கம், ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு மட்டத்தில் ஒரு புதிய தொடக்கமாக விளங்குகிறது. சதுரங்கத்தின் அதி தீவிர ஆர்வமும் அதன் மூலமாக உருவாகும் புத்திசாலிகளின் வரிசையும், நம்மை இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை பெருக்க வைக்கிறது. வாழ்க்கையை வெற்றிகரமானதாக அமைக்க இந்த சதுரங்கம் ஒரு ஆரம்ப புள்ளியாக உள்ளது.
Comments
Post a Comment