அமெரிக்கா : உலகின் வல்லரசு

உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட நாடு தான் ஐக்கிய அமெரிக்கா. உலக நாடுகளுக்கு எல்லாம் முதன்மையானதாக காணப்படும் அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ மொழி கிடையாது. இந்த நாட்டின் முக்கிய சின்னமாக விளங்கும் 151 அடி உயரமான சுதந்திர தேவி சிலையை 1886 ஆம் ஆண்டு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கியது. உலகின் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்று, மிகப்பெரிய இராணுவக் கட்டமைப்பு, அதிவேகமான தொழில்நுட்ப வளர்ச்சி என சகல துறைகளிலும் தன்னை நன்கு தகவமைத்து உலகின் வல்லரசாக உயர்ந்துள்ளது. இங்குள்ள அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பதை தங்கள் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அமெரிக்கர்கள் தங்கள் முகம் ஒரு தடவையாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரவேண்டும் என ஆசை கொண்டவர்கள். இவர்கள் தன்னார்வல பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். என்னதான் உலக வல்லரசாக இருந்தாலும், அதிக குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. வருடத்திற்கு சுமார் 15000 கொலைகள் நடைபெறுகிறது. அமெரிக்கர்கள் எவ்வாறு சாதரணமாக அனைவரும் கைத்தொலைபேசியை பாவிப்பார்களோ அதேபோல துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அத்துடன் மருத்துவத் துறையில் பல சிறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா பின்தங்கியே உள்ளது. தவறான மருத்துவ முறைகளால் ஆண்டுக்கு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்படுகிறது. இந்த நாட்டில் இதுவரை எந்த பெண்ணும் ஜனாதிபதியாக பதவியில் அமரவில்லை. 


தலைநகரம் - வாசிங்டன் டி.சி 

பிரதமர் - டொனால்ட் டிரம்ப்

அரசாங்கம் - கூட்டாட்சி நடாளுமன்ற அரசியலமைப்பு குடியரசு

சுதந்திர தினம் - 04 ஜீலை 1776

நாணயம் - டொலர்

நேர வலயம் - -4 – 12, +10, +11

இணையக் குறி - .us

தொலைபேசி குறி - +1

கல்வி அறிவு வீதம் - 90%

மக்கள் தொகை – 330 மில்லியன் 

முக்கிய நகரங்கள் - நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ, மியாமி

தேசிய விளையாட்டு- பேஸ்போல்


புவியியல் அமைவிடம்

9.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக காணப்படும் அமெரிக்கா வடக்கே கனடாவுடனும், தெற்கே மெக்சிகோவுடனும் நில எல்லைகளை பகிரந்து கொள்கிறது. மேற்கு எல்லையாக பசுபிக் கடல் காணப்படுகிறது. இங்கே அதிகளவான மழைக்காடுகளும், பெரிய பாலைவனங்களும், உலகின் மிக நீளமான நதிகளில் ஒன்றான மிசிசிபி-மிசோரி நதியும் வடக்கிலிருந்து தெற்காக நாட்டின் மையத்தை நோக்கி பாய்கிறது. இங்கு சக்திவாய்ந்த எரிமலைகளும் அதிகம் உண்டு. அமெரிக்கா பூகோள அமைவின் காரணமாக பல்வேறு காலநிலைகளை கொண்டுள்ளது. அத்துடன் இங்கு பல வகையான உயரினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல அழியும் நிலைக்கு சென்றுள்ளது. அதனால் 1973 அவற்றை பாதுகாக்க சட்டம் ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இங்கு மொத்தமாக 58 தேசிய பூங்காக்கள் உள்ளன. சில காடுகள் மற்றும் சமவெளிகளை அரசு தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. 

வரலாறு

கி.மு 20000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்து நட்சீர்நிலை பாலத்தை கடந்து மூலநிவாசிகள் அமெரிக்காவில் குடியேறினார்கள். அவர்கள் நாகரீகம், வேளாண்மை, கலை மற்றும் அரசமைப்பில் முன்னேறியிருந்தனர். 1492 இல் கொலம்பஸின் வருகைக்கு பின்னர் நோய்கள் மற்றும் போர் கலவரங்களால் இவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்தது. ஸ்பானிய மன்னருக்கும் இங்கிருந்த பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் 1607 இல் ஜேம்ஸ்டவுன், விர்ஜீனியா என்பன் முதல் வெற்றிகரமான குடியேற்றங்களாக அமைந்தன. தொடர்ந்து கலிபோர்னியா மற்றும் தெற்கு பகுதிகளில் ஸ்பெயின் குடியேற்றங்கள் நடைபெற்றது. 1620 இல் பில்கிரிம்கள் தரைப்படுத்தி பிளைம்த் குடியேற்றத்தை ஏற்படுத்தினார். அவர்கள் புதிய மத சுதந்திரத்தை நோக்கி சென்றனர். 1674 இல் டச்சு நாட்டினர் தங்களது பகுதிகளை இங்கிலாந்திடம் இழந்தனர். 1730 தொடக்கம் 1740 ஆண்டளவில் பெரும் விழிப்பு என்ற கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தோன்றி மத சுதந்திரத்திற்கு ஆர்வம் ஊட்டியது. 1770 களில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரங்கள் அமெரிக்க புரட்சிக்கு வித்திட்டது. இது 1781 வரை நடைபெற்றது. 1776 ஜீலை 4 இல் அமெரிக்க தனது சுதந்திரத்தை அறிவித்தது. 1783 இல் பிரிட்டன் அமெரிக்காவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. 1777 இல் கூட்டமைப்பு விதிகளின்படி உருவான ஐக்கிய அரசாங்கம் பலமற்றதாக 1989 வரை தொடர்ந்தது. 1787 இல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் முதல் அதிபராக ஜார்ஜ் வாசிங்டன் 1789 இல் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின் பொருளாதார வளரச்சி அதிகரித்தது. 1800 களில் அடிமை முறை தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படவே உள்நாட்டு கலவரங்கள் அதிகரித்தது. ஆப்ரஹாம் லிங்கன் யூனியன் படைகளுக்கு தலைமை தாங்கினார். போரின் முடிவில் யூனியன் வெற்றி பெற்றது. இந்த கலவரங்களின் விளைவாக 1863 இல் அடிமை ஒழிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. இதுவரை அடிமைகளாக இருந்தவர்களுக்கு சுதந்திரத்தை அளித்ததோடு அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டு வாக்களிக்கும் சுதந்திரமும் கிடைத்தது. இதன் பின்னே அமெரிக்க தனது வளர்ச்சியில் வேகமெடுத்தது. பெருநகரங்கள், ரயில்வே அமைப்பு போன்றன தோற்றம் பெற்றது. 1920 இல் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அமெரிக்க நடுநிலை வகித்தது. ஆனாலும் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்ற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நேச நாடுகள் சார்பில் 1917 இல் உலக யுத்தத்தில் தனது காலை வைத்தது. இந்த யுத்தத்தின் விளைவாக அமெரிக்க பொருளாதாரம் அதிகரித்தது. இரண்டாம் உலக போரிலும் ஆரம்பத்தில் ஒதுங்கியே இருந்தது அமெரிக்கா. ஆனால் 1941 இல் ஜப்பான், அமெரிக்காவின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான பேர்ள் துறைமுகத்தை தாக்கியதற்கு பதிலளிக்க போரில் குதித்தது. இந்த யுத்த்தில் பங்குபற்றியதன் விளைவாக அமெரிக்க உலக அரங்கில் முன்னணி பெற தொடங்கியது. ஏனைய நாடுகள் போரினால் ஏற்பட்ட அழிவுகளில் தவித்தவேளை அமெரிக்க தனது நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது. 1945 இல் ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி தனது பழியை தீர்த்த அதேவேளை இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தது. இரண்டாம் உலகப் போரிற்கு பின் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் அதிகாரத்திற்கான ஆயதப் போட்டியில் இறங்கின. 1969 இல் நாசா முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சாதனை படைத்தது. 11 செப்டம்பர் 2001 இல் பயங்கரவாதிகள் நியூயோர்க் நகர உலக வர்த்தக மையத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3000 மக்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்க ஜனாதிபதி புஸ் நிர்வாகம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ன தீவிரவாத கும்பல்களை அழித்தது. 2008 இல் பாரக் ஓபாமா முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபராக தெரிவானார். இவருடைய காலத்தில் இன, மத மற்றும் பால் வேறுபாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றது. தற்போது உலக அரங்கில் தவிர்க்க முடியாத ஆளுமையாக ஐக்கிய அமெரிக்க உள்ளது.

அரசியல்

அமெரிக்கா உலகின் பழமையான கூட்டமைப்பாகும். அமெரிக்க குடியரசு மக்களாட்சி முறையிலான நாடாகும். 1787 இல் உருவாக்கப்பட்ட அரசமைப்பு அமெரிக்க அரசியலமைப்பின் அடிப்படையாகும். இது மக்கள் உரிமைகள் மற்றும் அரசாங்க அதிகாரங்களை விளக்குகிறது. மத்திய அரசாங்கம் நாடு முழுவதும் சட்டங்களை விரிவுபடுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ள வேளை மாநில அரசாங்கம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி சட்டங்கள் மற்றும் அதிகாரங்களை கொண்டுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பின் மூன்று முக்கிய அதிகாரங்களாக சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதிமன்றம் என்பன உள்ளது. சட்டமன்றத்தில் செனற் மற்றும் எடுகளம் என்ற இரு அமைப்புக்கள் உண்டு. செனட் சபைக்கு ஒரு மாநிலத்தில் இருந்து இருவர் வீதம் மொத்தமாக 100 பேர் தெரிவுசெய்யப்படுவார். எடுகளம் சபைக்கு 435 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார். இது மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும். நான்கு வருடங்களுக்கு ஒரு தடைவ ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இரு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்கமுடியாது. நீதிமன்றங்கள் அரசியலில் உள்ள சட்ட ரீதியான பிரச்சனைகளை தீர்க்கிறது. முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதிகள் வாழ்நாள் பதவியில் இருப்பார். அமெரிக்கா மக்களாட்சி கட்சி, குடியரசு கட்சி என்ற இரு கட்சி அமைப்பின் கீழ் இயங்கிவருகிறது. 

கலாச்சாரம் மற்றும் பண்பாடு

அமெரிக்கா பன்முகத்தன்மை கொண்ட கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஒரு நாடாகும். இங்கு பூர்விக குடிகள் என்று எவருமில்லை. எல்லோருமே கடந்த சில நூற்றாண்டுகளில் குடியேறியவர்களே. பெரும்பாலும் ஐரோப்பிய – ஆப்பரிக்க இணைந்த காலாசாரமே காணப்படுகிறது. இங்கு தேசிய மொழி என்று எதுவுமில்லை எனினும் ஆங்கிலம் அரசகரும மொழியாக காணப்படுகிறது. ஸ்பானிஸ், சீன மொழி என்பவும் இங்கு பேசப்படுகிறது. கிறிஸ்தவ மதத்தையே பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். மதசுதந்திரம் முக்கியமான அம்சமாக அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கிறிஸ்துமஸ், புதுவருடம், ஹாலோவீன் என்பன பொதுவாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஆகும். அவைதவிர சுதந்திர தினம், அர்மடா நாள், சமூக ஒற்றுமை நாள் என்பனவும் இங்கு கொண்டாடப்படுகிறது. இங்கு உருவாகும் திரைப்படங்கள் உலகளவில் நல்ல வரவேற்பை பெறுகிறது. அவற்றை பல மொழிகளில் மொழிபெயர்த்தும் வெளியிடப்படுகிறது. உலகளவில் பிரபல்யமாக இருக்கும் ஜாஸ், ஹிப் ஹாப் போன்ற இசைகள் இங்கிருந்தே வந்தன. நதேனியல் ஹாதோரன், எட்கர் ஆலன் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் 19 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க இலக்கிய மரபுகளை தோற்றுவித்தனர். மார்க் ட்வெயின், வால்ட் விட்மேன் 20 ஆம் நூற்றாண்டில் முக்கிய படைப்பாளிகளாக இருந்தனர். 11 அமெரிக்கர்கள் இலக்கியத்திற்கான நோபால் பரிசை பெற்றுள்ளனர். சுப்பர் ஹீரோ காமிக் புத்தகங்கள் எல்லாம் அமெரிக்கர்களின் கண்டுபிடிப்பே ஆகும். அமெரிக்க உணவுப் பழக்கம் மேற்கத்திய நாடுகளை ஒத்துள்ளது. கோதுமை பிரதான உணவு தானியமாக உள்ளது. மாட்டுக்கறி, நண்டு கே;குகள், சிப்ஸ் குக்கிஸ் ஆகியன இவர்களின் சிறப்பு உணவுகள். ஆப்பிள் வைன், பாற்பாயசம் போன்றன அமெரிக்க பாரம்பரியத்தை சொல்கின்றன. இங்கு சில மாநிலங்களில் ஓர் பாலின திருமணம் அங்கீகரிக்கப்படுகிறது.  அமெரிக்கன் கால்பந்து, கூடைப்பந்து மற்றும் ஐஸ் ஹாக்கி என்பன தொழில்முறை விளையாட்டுக்கள் ஆகும். அமெரிக்க எட்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது. 

பொருளாதாரம் 

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய மற்றும் பலமிக்க பொருளாதாரங்களில் ஒன்றாகும். இங்கு ஒரு முதலாளித்துவ கலப்பு பொருளாதாரம் காணப்படுகிறது. 2024 இன் நிலவரப்படி உள்நாட்டு மொத்த உற்பத்தி சுமார் 26 டிரில்லியன் டொலர்கள் ஆகும். இது உலகளவில் முதலாவதாகும். மொத்த உலக உற்பத்தியில் 20மூ ஆகும். உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளாராக இருப்பதுடன், மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் காணப்படுகிறது. மின்னனு உபகரணங்கள், வான்வெளி பாகங்கள், மருந்து தயாரிப்புகள் என்பன முக்கிய ஏற்றுமதி பொருட்களாகவும், இயந்திரங்கள், வாகனங்கள், எண்னெய் என்பன முக்கிய இறக்குமதி பொருட்களாகவும் உள்ளது. சீனா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் என்பன முக்கிய வர்த்தக பங்காளிகளாக உள்ளன. நியூயார்க் நகரில் அமைந்துள்ள வால்ட்ஸ்ட்ரீட் உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தை மையமாகும். அமெரிக்க டாலர் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் அளவீடாக உள்ளது. இந்நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாதுறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. வருடத்திற்கு சுமார் 80 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். வருடத்திற்கு 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பான பங்களிப்பை வழங்குகிறது. அமெரிக்கா தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக உள்ளது. அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற உலகை கட்டியாளும் நிறுவனங்கள் எல்லாம் இங்கேதான் உள்ளது. சிலிக்கான் பள்ளத்தாக்கு உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாகும். நாசா என்ற மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி மையமும் இங்குள்ளது. அமெரிக்க பொருளாதாரத்திற்குள்ள முக்கிய சவால் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சி, இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கே சவால்விடுவதாக உள்ளது. 

முக்கிய சுற்றுலாத்தளங்கள் சில

சுதந்திர சிலை

எபரி லைட்

நியூயார்க் நகர்

அலஸ்கா

டிஸ்னி வேர்ல்ட்

ஹோலிவுட்

லாஸ் வேகாஸ்

அல்கஜிரா

மாம் மலை

பார்க் மாலிட்ஸ்


Comments

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்