சீனா : உலகின் பெரிய நாடு

சீனா கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும்.  உலகில் ரஸ்யா, கனடா க்கு அடுத்து பரப்பளவில் மிகப்பெரிய நாடாக சீனா உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிலையான உறுப்புரிமையை கொண்ட நாடு. இந்நாட்டின் தலைநகரம் பிஜிங் ஆகும். சாங்காய் இதன் பெரிய நகரம் ஆகும். உலகில் தோன்றிய பழமைவாய்ந்த நகரங்களில் இதுவும் ஒன்று. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. சீனர்கள் தங்கள் புதுவருடத்தை மற்ற நாடுகளை போல் அல்லாமல் ஜனவரி 21 தொடக்கம் பெப்ரவரி 20 ற்குள் வரும் நாடகளில் கொண்டாடப்படுகிறது. இவர்கள் புதுவருடத்தை 15 நாட்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் புரட்சியின் அடையாளமாக இருக்கும் சிவப்பு நிறத்தை சீன மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் அவர்களின் தேசிய கொடியில் சிவப்பு நிறத்தை பிரதானப்படுத்தியுள்ளனர். அத்துடன் இந்த சிவப்பு நிறத்தை மகிழ்ச்சியின் அடையாளமாக கொண்டுள்ளனர். யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற 56 பாரம்பரிய இடங்கள் இங்கு காணப்படுகின்றன. இத்தாலிக்கு அடுத்து அதிகளவான பாரம்பரிய இடங்களை கொண்ட நாடு சீனா தான். முதியோர் நலனுக்கென சிறப்புச் சட்டங்களை கொண்டுள்ளது. உலக அரங்கில் சிறந்த பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் சீனா முதன்மையானதாக விளங்குகிறது. இந்த வளர்ச்சி கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகும். 

 

தலைநகரம் - பீஜிங்

பிரதமர் - லீ கியாங்

அரசாங்கம் - ஒரு கட்சி சோசலிசக் குடியரசு

நாணயம் - ரென்மின்பி

நேர வலயம் - +8

இணையக் குறி - .ch

தொலைபேசி குறி - +86

கல்வி அறிவு வீதம் - 99ம%

மக்கள் தொகை – 140 கோடி

முக்கிய நகரங்கள் - பீஜிங், சென்ஜென், குவாங்சோ

தேசிய விளையாட்டு – பிங்க்பாங்க் 


புவியியல் அமைவிடம்

ஆசியாவின் கிழக்குப் பகுதியல் அமைந்துள்ள மிகப் பெரிய நாடாகும். இது பரப்பளவில் பெரிய நாடு என்பதால் இதற்கு பல நாடுகள் எல்லைகளாக உள்ளன. அவையாவன: வட கொரியா, ரஸ்யா, பாகிஸ்தான், இந்தியா, பூட்டான், மியான்மார், ஜப்பான், மலேசியா நேபாளம். சீனாவில் மூன்றில் இரண்டு பாங்கான இடம் மலைகளால் ஆனது. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் திபெத் மற்றும் நேபாள எல்லையில் உள்ளது. சீனாவில் 1500 ற்கும் மேற்பட்ட ஆறுகள் உண்டு. அதில் ஆசியாவிலே மிக நீளமான நதியான யாங்செ பாய்கிறது. அதன் நீளம் சுமார் 6300 கிலோமீற்றர்கள். சீனாவின் தெற்கு பகுதியில் பரந்தளவான காடுகள் உண்டு. 


வரலாறு

தொண்மையான வரலாற்றை கொண்ட சீனாவின் வரலாறு மிகப்பெரிய காலப் பிரிவை உள்ளடக்கியது. ஐரோப்பிய நாடுகளில் நாகரீகம் தோன்றும் முன்னரே சீனர்கள் உண் குச்சிகள் மூலம் உணவு உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர். சீன நாகரீகம் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவானது. சியா வம்சமே சீனாவை ஆட்சி செய்த முதல் அரசாக வரலாற்று பதிவு காணப்படுகிறது. இதன் காலம் கி.மு 2070 தொடக்கம் கி.மு 1600 வரை ஆகும். இதனை அடுத்து சாங் வம்சம் கி.மு 1600 முதல் கி.மு 1046 வரை சீனாவை ஆண்டது. இந்த காலகட்டத்தில் தான் முதல்தர நகரங்கள் மற்றும் மத நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன. அத்துடன் இரும்பின் பயன்பாடும் அதிகரித்தது. கி.மு 1046 தொடக்கம் கி.மு 256 வரை ஜோ வம்சம் ஆட்சி செய்தது. கொன்பூசியசம், தாவோவியம் போன்ற முக்கியமான தத்துவங்கள் தோற்றம் பெற்றது. பகுதிய ஆட்சி முறையை ஜோ வம்சம் அறிமுகப்படுத்தியது. கி.மு 221 இல் ஆட்சிக்கு வந்த கின் வம்சமே முதலில் சீனாவை ஒருங்கிணைத்தது. இந்த காலகட்டத்தில் தான் சீனப் பெருஞ்சுவர் கட்ட ஆரம்பிக்கபட்டது. அடுத்து வந்த ஹான் வம்சம் மரபுரிமை மற்றும் கலாசாரம் தோன்ற அடித்தளம் இட்டனர். கி.பி 618 இல் தங் வம்சம் ஆட்சிக்கு வந்தது. இவர்களுடைய காலத்தில் தான் சீனாவில் பௌத்த சமயம் பெருமளவில் வளர்ச்சி அடைந்தது. தொடர்நது வந்த சாங் காலத்தில் நகர வாழ்க்கை தரம் உயர்ந்தது. கி.பி 1271 இல் மங்கோலியர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றனர். இவர்களுடைய காலத்தில் சீனா ஒருங்கிணைந்து இருந்தாலும் அதன் தேசிய அடையாளம் குறைய தொடங்கியது. கி.பி 1368 இல் ஆட்சிக்கு வந்த மிங் வம்ச காலத்திலேயே கலை மற்றும் கட்டிட கலை வளர்ச்சிப் பாதையில் சென்றது. சீனாவை இறுதியாக ஆட்சி செய்த அரசாக கிங் வம்சம் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் வருகை ஓப்பியம் போர் என்பவற்றால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 

1912 இல் சீன குடியரசு நிறுவப்பட்டது. அதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசியவாத கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் ஏற்பட்டது. 1949 இல் மாவோ சேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி உள்;ர் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து சீனாவின் ஆட்சி பொறுப்பை கைப்பற்றியது. இவர்களுடைய காலத்தில் பொருளாதார முன்னேற்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் பழைய மரபுகளை அழித்து புதிய மரபுகளை உருவாக்க முயற்சித்தனர். ஆனாலும் இவர்களின் கொள்கைகள் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. மாவோ சேதுங் மரணம் வரை இந்த புரட்சி நடைபெற்றது. அதன்பின் டெங் சியாவ் பிங் தலைவரானார். இவர் 1978 இல் சந்தை பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தி, சீனாவின் பொருளாதராத்தை உலகளவில் திறந்தார். இதனால் சீனா பொருளாதாரத்தில் ஒரு வலுவான இடத்தை பிடிக்க ஏதுவாய் அமைந்தது. 1990 களில் உலகளாவிய பொருளாதாரங்களில் சீனா முக்கிய பங்காளியாக மாறியது. 21 ஆம் நூற்றாண்டில் சீனா தொழில்நுட்பம், பொருளாதாரம், கல்வி மற்றும் சர்வதேச அரசியலில் முன்னணி பெற்று உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. 


அரசியல்

சீனாவின் அரசியலமைப்பு ஒரு கம்யூனிஸ்ட் ஓர்பார்ப்பாளர் இயக்க அமைப்பின் கீழ் செயற்ப்படுகிறது. இங்கு ஒரு தலைமையான ஆட்சியே நடைபெறுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி தான் அந்த ஒரு கட்சி. இன்னும் சில இயக்கங்கள் இருந்த போதிலும் அது கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் மட்டுமே செயற்பட அனுமதிக்கப்படுகிறது. இங்கு சுதந்திர கட்சிகள் அல்லது வாக்களாருக்கான சுதந்திரம் இல்லை. மக்கள் தேசிய காங்கிரஸ் சீனாவின் உயர்ந்த சட்டமன்றம் ஆகும். இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார். மாநில மன்றத்தின் தலைவர் பிரதமர் ஆவார். நாடு மற்றும் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ஆவார். 23 மாகாணங்கள், 5 தன்னாட்சி பகுதிகள், 4 மத்திய கட்டுபாட்டு நகரங்கள், 2 சிறப்பு நிர்வாக பகுதிகள் என சீனாவின் உள்ளுர் அரசியல் பிரிக்கபட்டுள்ளது. தாய்வனை சீனா தனது ஒரு அங்கமாகவே கருதுகிறது. ஆனால் தாய்வான் தன்னை சுதந்திர நாடாக பிரகடனப்படுத்துகிறது. சீன அரசால் மக்களின் நடத்தை மற்றும் நிதியியல் செயல்பாடுகளை கண்காணித்து மதிப்பீடு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.


கலாச்சாரம் மற்றும் பண்பாடு

சீன கலாசாரம் 5000 ஆண்டுகள் பழமையானது. இது தனது நீண்ட வரலாற்று மரபுகள், கலைகள் மற்றும் வாழ்வியலை இன்றளவும் பயன்படுத்தி வருகிறது. உலக போர்களின் பின் உலகம் முழுவதும் மாற்றத்திற்கு உள்ளானது ஆனாலும் சீனாவில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. அவர்கள் தங்கள் புராதன கலாசாரத்தையே பின்பற்றி வருகின்றனர். சீனாவில் அதிகார மொழி மண்டரின் ஆகும். உலகில் அதிக மக்கள் பேசும் மொழியும் இதுவே ஆகும். பௌத்தம், தாவோவியம் மற்றும் கொன்பூசியம் என்பன இங்குள்ள முக்கியமான அதிக மக்கள் பின்பற்றும் மதங்கள் ஆகும். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் குறைந்தளவான மக்களே பின்பற்றுகின்றனர். பண்டைய சீன ஓவியங்கள் சீனர்கள் இயற்கையுடன் எவ்வளவு ஒன்றித்து வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறது. குடுசேங், எர்ஹீ என்பன சீனர்கள் பயன்படுத்திய பாரம்பரிய இசைக்கருவிகள் ஆகும். டிராகன் டான்ஸ், லயன் டான்ஸ் என்பன சீனாவின் முக்கிய விழாக்களில் ஆடப்படும் பிரபல்யமான நடன வகைகள் ஆகும். சீனர்களின் உணவுப் பழக்கங்களை உலகம் நன்கறியும். பாம்பு, தவளை போன்ற விசம் உள்ள உயிரனங்களை கூட அவர்கள் உணவாக உட்கொள்கின்றனர். இதற்கு காரணம் சீனாவில் ஏற்பட்ட சனத் தொகை அதிகரிப்பு ஆகும். அதனால் அனைவருக்கும் போதுமானளவு உணவுகளை உற்பத்தி செய்வதில் சிரமம் உள்ளது. ஆனாலும் இங்கு சிச்சுவான் என்ற மிளகாய் அதிகமுள்ள உணவை அதிகம் பேர் விரும்பி உண்ணுகின்றனர். உணவை போலவே மருத்துவ துறையிலும் சீனர்கள் பெயர் பெற்றவர்கள். பிரபல்யமான அகுபஞ்சர் முறை சீனாவிலேயே தோற்றம் பெற்றது. இங்கு தோன்றிய பல மருத்துவ முறைகள் இன்று பல நாடுகளில் பரவியுள்ளது. சீனப் புத்தாண்டு அவர்களுக்கு மிக முக்கியமான விழாவாகும். இதனை அவர்கள் 15 தினங்கள்  கொண்டாடுவார்கள். அதைதவிர மத்திய கதிர் விழா எனும் நிலவுக்கு நன்றி கூறும் பண்டிகை பிரபல்யமானது. ஹான் ஃபூ என்பது சீனர்களின் பண்டைய உடையாகும். குடும்ப அமைப்பு முறைக்கு சீனாவில் அதிக முக்கியத்துவம் உண்டு. குடும்பத்தில் உள்ள முதியவர்களை கவனிக்க வேண்டியது இளையோர்களின் கடமை. அது தவறும் பட்சத்தில் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியும். குக்பூ மற்றும் தை சி என்பன முக்கிய விளையாட்டுகளாக உள்ளது. 

பொருளாதாரம் 

சீனா உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் பொருளாதாரம் சமநிலை மயமான சந்தை பொருளாதாரம் ஆகும். இதில் அரசின் கட்டுப்பாடும், தனியார் முதலீடும் இனைந்துள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் 10 வீதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. சீன நிறுவனங்கள் பல ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உட்கட்டமைப்பு நிறுவனங்களை நடாத்தி வருகிறது. உலகில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ளது. சீனா உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடாக திகழ்கிறது. எலக்ட்ரோனிக்ஸ், ஸ்மார்ட் போன்கள், ஆட்டோ மொபைல்கள் மற்றும் துணி வகைகள் என்பன முக்கிய ஏற்றுமதி பொருட்களாக காணப்படுகிறது. உலகின் மூன்றாவது பெரிய இறக்குமதி பொருளாதாரத்தை சீனா கொண்டுள்ளது. எரிபொருள், கனிம பொருட்கள், உணவுப் பொருட்கள் என்பன முக்கிய இறக்குமதி பொருட்களாகும். தொழில்நுட்பத்திற்கு அதிக முதலீடுகளை செய்கிறது. 5G தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களை உலகம் முழுவதும் செயற்படுத்திவருகிறது. சீனா ரெஸ்லா, மின்சார வாகனங்கள் போன்ற உலகின் முண்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துகின்றது. உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அலிபாபா, JD.com என்பன இங்கே தான் உள்ளன. அரிசி, கோதுமை, சோளம் போன்றன அதிகளவில் பயிரிடப்படுகிறது. தொழில்துறை வளர்ச்சியால் காற்றுமாசு அதிகளவு ஏற்படுகிறது. மாற்று ஆற்றலை (சூரிய ஒளி, காற்று) பயன்படுத்துவதில் சீனா முண்ணனியில் உள்ளது. உலகின் மிகப் பெரிய நீர்மின் உற்பத்தி திட்டம் சீனாவில் பயன்பட்டில் உள்ளது. 


முக்கிய சுற்றுலாத்தளங்கள் சில

சீனப் பெருஞ்சுவர்

தியான்மென் சதுக்கம்

திபெத் பீடபூமி

லேசன் புது சிலை

பொட்டாலா அரண்மனை

மாக்காவோ

ஹைனான் தீவு

 


Comments

Post a Comment

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்