இந்தியா: பாரம்பரியத்தின் புகலிடம்

இந்தியா, தென் ஆசியாவில் அமைந்துள்ள ஒரு பழமையான நாடாகும். 5000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. உலகின் ஏழாவது பெரிய நாடு இந்தியா. அத்துடன் இரண்டாவது மிகப்பெரிய சனத்தொகையை கொண்ட நாடு. இங்கு பல மொழிகள், பல்வேறு கலாசாரங்கள், பாரம்பரியங்கள், பல மதங்கள் என்பவற்றை கொண்ட புராதன நாடாகும். பல இராச்சியங்கள் தோன்றி மறைந்துள்ள போதும் இன்னமும் அவை உலகிற்கு அழிக்க முடியாத பல விடயங்களை இன்னும் சுமந்து கொண்டு உள்ளது. வல்லரசு நாடுகளே விண்வெளி ஆராய்சியில் ஆரம்ப கட்டத்தில் இருக்க இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சியையே உருவாக்கிவிட்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் உலக அரங்கில் இந்தியா வலுவான ஜனநாயக நாடாக விளங்குகிறது. மேலும் உலகளாவிய பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பொருளாதாரத்தில் மட்டுமின்றி கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளது.


தலைநகரம் - புதுடில்லி

பிரதமர் - நரேந்திர மோடி

அரசாங்கம் - கூட்டாட்சி நாடளுமன்ற அரசியலமைப்பு குடியரசு

சுதந்திர தினம் - 15 ஆகஸ்ட் 1947

குடியரசு தினம் - 26 ஜனவரி 1950

நாணயம் - இந்திய ரூபாய்

நேர வலயம் - +05.30

இணையக் குறி - .in

தொலைபேசி குறி - +91

கல்வி அறிவு வீதம் - 74%

மக்கள் தொகை – 140 கோடி

முக்கிய நகரங்கள் - சென்னை, பெங்களுரு, மும்பை, குஜராத்

தேசிய விளையாட்டு - ஹாக்கி


புவியியல் அமைவிடம்

இந்தியா ஆசியாவிலே வடக்கில் ஹிமாலய மலைப்பகுதியால் சீனா, நேபாளம் மற்றும் பூட்டான் நாடுகளுடனும், கிழக்கில் மியான்மார் மற்றும் பங்களாதேஸ் உடனும், மேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுடனும், தெற்கில் இந்திய பெருங்கடலுடனும் சூழப்பட்டுள்ளது. இந்நாட்டின் பரப்பளவு சுமார் 3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். 7500 கிலோமீட்டர்கள் கடற்கரைகளால் அமையப்பெற்றுள்ளது. இதனால் கடல் சாரந்த மற்றும் வர்த்தக, வணிக செயற்பாடுகளுக்கு உதவியாக உள்ளது.


வரலாறு

இந்தியாவின் வரலாறு மிக புராதனமானது. இந்தியர்களின் முன்னோர்கள் ஆபிரிக்காவில் இருந்தே இந்திய துணைகண்டத்திற்கு வருகை தந்தனர். இது ஏறத்தாழ 55000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது. இங்கே தான் உலகின் மிகப் பெரிய நாகரீகமாக கருதப்படும் சிந்துவெளி நாகரீகம் தோற்றம் பெற்றது. இது கி.மு 3300 – கி.மு 1300 காலப்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தில் நிகழ்ந்தது. அடுத்து கி.மு 1500 – கி.மு 500 வரையான காலத்தை வேத காலம் என குறிப்பிடுகின்றனர். இந்த காலகட்டத்தில் தான் இந்து மதத்தின் அடிப்படை கட்டமைப்புக்களான நான்கு வேதங்களும் தோற்றம் பெற்றன. இந்த காலகட்டத்தில் தான் சாதிய அமைப்பு முறை தோற்றம் பெற ஆரம்பித்தது. கி.மு 600 – கி.மு 300 காலகட்டத்தில் தான் மகாவீரர் ஜைன மதத்தையும், புத்தர் பௌத்த மதத்தையும் அறிமுகப்படுத்தினர். இந்த கால கட்டத்தில் இருந்தே வரலாறுகளை பதிவு பண்ணும் வழக்கம் ஆரம்பித்தது. இதிலிருந்தே எழுத்து மூல ஆவணங்கள் பெற்ப்பட்டுள்ளது. மேற்கூறிய காலகட்டங்களில் நிகழ்ந்தவற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலமே அறிய முடிந்தது. கி.மு 3 ஆம் நூற்றாண்டில் அதாவது கி.மு 322 – கி.மு 185 காலத்தில் இந்தியாவின் சிறுசிறு பகுதிகளை இணைத்து பரந்த இராச்சியமாக மௌரிய பேரராசு உருவானது. இப்பேரரசின் முதல் மன்னன் சந்திரகுப்த மன்னர் ஆவார். மௌரிய பேரரசின் முக்கிய அரசன் அசோகன். இள வயதிலேயே பல போர் களங்களில் பங்குபற்றி அங்கு நடக்கும் கொடூரங்களால் மனமுடைந்த அசோகன் அமைதியை விரும்பி புத்த மதத்தை பின்பற்றுகிறான். இந்த சம்பவம் பௌத்த மதம் இந்திய துணைகண்டத்தை விட்டு வெளியில் பரவவும் ஏதுவாய் அமைந்தது. கி.பி 320 – கி.பி 550 கால குப்த பேரரசின் காலமாகும்.. இந்த கால கட்;டத்தில் தான் அறிவியல், கணிதம், கலை, இலக்கியம் என்பவற்றில் புதுபொழிவு பெற்றது. முக்கிய கண்டுபிடிப்பாக பூஜ்யம் கண்டுபிடிக்கப்ட்டது. இதற்கு பிறகே தீர்க்கபடாமல் இருந்த பல கணித புதிர்கள் இலகுவில் உடைக்கப்பட்டது.

கி.பி.600 – கி.பி 1200 இந்திய வரலாற்றில் முக்கியமான காலகட்டமாகும். பல அரசுகள் இணைந்து இருந்த குப்த அரசு வீழ்ச்சியுற பல பிராந்திய அரசுகள் தோற்றம் பெற்றன. இந்த காலகட்டத்தில் தான் தெற்கில் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் ஆட்சி நடந்தது. கலை, கட்டடம், சிற்பம் என்பன அதிகமாக தோற்றம் பெற்றதும் இந்த காலப் பகுதியில் தான். கி.பி 1206 – கி.பி 1526 இல் முஸ்லீம் ஆட்சியாளர்கள் டெல்லி சுல்தானை நிறுவினர். இதனால் இந்திய பாரம்பரிய கலாசாரத்துடன் பாரசீக கலாசாரமும் கலந்தது. இது இந்திய கலைப் பண்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 16 ஆம் நூற்றாண்டில் பாபர் தலைமையில் முகலாய பேரரசு நிறுவப்பட்டது. அக்பர் மிக முக்கியமான முகலாய பேரரசர் ஆவார். இவருடைய காலத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. தாஜ்மஹால் போன்ற உலக அதிசயம் தோற்றம் பெற்றதும் இந்த காலத்தில் தான். நாடுகாண் பயணத்தின் விளைவாக 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அந்நியர்கள் இந்திய துணைகண்டத்திற்கு வருகை தந்தனர். வர்த்தக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர். இந்திய வரலாற்றில் இந்த நிகழ்வு முக்கிய இடம்பெறுகிறது. மன்னர் ஆட்சி முடிவிற்கு வந்து ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்டது இந்தி ஆங்கிலேய ஆட்சியில் தான். 1947 வரை இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே நடைபெற்றது. மகாத்மா காந்தி, சுபாஸ்; சந்திரபோஸ், நேரு போன்றவர்களின் போராட்டத்தின் பலனாக 1947 இல் சுதந்திரம் பெற்றது இந்தியா. சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அனைத்து இந்திய மக்களும் இணைந்து ஒரு ஜனநாயக குடியரசாக இந்தியாவை உருவாக்கினர். கல்வி, அறிவியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில்நுட்பம் என அனைத்து துறைகளிலும் தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளது.  


அரசியல்

பல கட்சி அமைப்புடைய ஒரு நாடாளுமன்றக் குடியரசான இந்தியா இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனநாயக கட்சி உட்பட ஆறு அங்கீகரிக்கபட்ட தேசிய கட்சிகளைக் கொண்டுள்ளது. பிரதமரை முதன்மையாக கொண்டு மாநிலங்களவை மற்றும் மக்களவை என்ற இருமன்ற அமைப்பின் மூலம் ஜனநாயக அடிப்படைகளை பேணுகிறது. மாநிலங்களவை 245 உறுப்பினர்களையும், மக்களவை மன்றம் 543 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மாநில அரசியல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்குள்ள முக்கிய பிரச்சினை மாநிலங்கள் சாதி மற்றும் மத கட்டமைப்புக்களால் பிளவுபட்டுள்ளது. சனத்தொகை அதிகமாக உள்ளதால் இங்கு சட்ட ஓழுங்கு நடவடிக்கைகள் கடைப்படிப்பதில்; நீதித் துறைக்கு பாரிய சவால்கள் ஏற்படுகிறது. இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர்ந்த அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பது உச்ச நீதிமன்றமாகும். இந்திய அரசின் தலைவராக குடியரசு தலைவர் இருப்பார். இவர் கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், முப்படைகளின் தளபதியும் ஆவார். இந்த பதவியில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஏ.பி.ஜே அப்துல் கலாம் இருந்துள்ளார்.


கலாச்சாரம் மற்றும் பண்பாடு

உலகில் உள்ள தொண்மையான கலாச்சாரங்களை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கிட்டதட்ட 5000 ஆண்டுகளிற்கு மேற்பட்ட கலாசாரங்கள் மற்றும் பண்பாடுகள் இன்னமும் இந்திய மக்களால் பின்பற்றப்படுகிறது. அந்நியராட்சி காலத்தில் கலாசாரங்களில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும் பெரும்பாலானவை மாற்றம் இன்றியே தொடர்கிறது. இங்கே தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி போன்ற 22 அதிகாரபூர்வ மொழிகள் உள்ளன. ஆனாலும் இந்தி மற்றும் ஆங்கிலம் முக்கிய இடம்பெறுகின்றன. இங்குள்ள 28 மாநிலங்களும் வெவ்வேறான மொழிகளையும் காலாசாரங்களையும் கொண்டுள்ளன. உலகின் முக்கியமான சில மதங்களின் தோற்றம் இந்தியாவிலேயே நிகழ்ந்தது. இந்து மதம், பௌத்தம், ஜெயினிஸம் மற்றும் சீக்கியம் போன்ற மதங்கள் தோன்றி உலகம் முழுவதும் பரவியது இங்கிருந்து தான். இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களும் பெரும்பாலானோர் பின்பற்றுகின்றனர். 79.8 வீதமான மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஆன்மீக பயணங்களிற்கு முக்கியமானதாகும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் உயிர் பெற்றதும் இந்த இந்திய மண்ணிலே தான்.

இந்தியா கலையில் அதிக ஆர்வம் கொண்டது. இங்கு உருவாக்கப்படும் நாடகங்கள், இசைகள், இலக்கியங்கள், சினிமாக்கள் என்பவற்றுக்கு உலகம் முழுவதிலும் ரசிகபட்டாளம் ஏராளம் உண்டு. இந்தியர்களின் முக்கியமான பொழுதுபோக்கு சினிமா ஆகும். இந்திய நடனகலையில் பரதநாட்டியம், ஒடிசி, குச்சிபுடி, கதகளி போன்ற பிரதான இடம் வகிக்கின்றன. இன்னமும் கிராமங்களில் நாட்டார் பாடலகள், உள்;ர் தெய்வ வழிபாடுகள் நடைபெறுகின்றன. பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் என்பன இந்தியர்களின் வாழ்வில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமழான், நவரத்திரி என்பன அவற்றுள் பிரதானமானது. சேலை, வேட்டி, குர்தா, சல்வார் போன்றன இந்தியர்களில் பாரம்பரிய ஆடையமைப்பு முறைகளாகும். இந்திய உணவுகள் தனித்துவமானவை. அரிசியும் கோதுமையும் இந்தியர்களின் உணவுகளில் பிரதான பங்குவகிக்கின்றன. உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா சுற்றுலாதுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 6.2மூ பங்களிக்கிறது. தாஜ்மஹால், தஞ்சை பெரியகோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் ஏராளம் உண்டு. 


பொருளாதாரம் 

இந்தியப் பொருளாதாரம் உலகின் மிகப்பெரிய, விரைவாக வளரந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு கணிசமானது. அந்நியராட்சி காலத்திற்கு பின் கூட இந்தியாவால் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை பெறமுடியவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பொருளதார சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய பொருளாதாரம் உச்சம் பெற தொடங்கியது. உலக வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் அதிகளவான வர்த்தக தொடர்புகளை பேணுகிறது. உள்நாட்டு வர்த்தகத்தை பொறுத்தவரை விவசாயம் மற்றும் வேளாண்மை பெரும் பங்கை வகிக்கிறது. வாகனங்கள் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், உலோக உற்பத்தி போன்றன நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கின்றன. “மேக் இன் இந்தியா” எனும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. டிஜிட்டல் இந்தியா எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் தொழிநுட்பத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. 1991 இல் இந்தியா தனது பொருளாதாரத்தை திறந்துவைத்து, தனியார் துறைக்கு வரவேற்பு அளித்தது. என்னதான் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உலக அரங்கில் பொருளாதாரத்தில் சமனாக இருந்தாலும் இந்திய தேசத்தில் இன்னமும் வறுமை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் கணிசமான அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த சவால்களை திறம்பட எதிர்கொண்டு செயற்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா தனக்கென ஒரு இடத்தை பெற்றுவிடும். 


முக்கிய சுற்றுலாத்தளங்கள் சில:

தாஜ்மஹால்
வரணாசி
கோவா கடற்கரைகள்
மஹாபலிபுரம்
தஞ்சை பெரிய கோவில்
அஜந்தா மற்றும் எல்லோரா
குதுப்மினார்
லடாக்



 

Comments

Post a Comment

Popular posts from this blog

கல்கியின் பொன்னியின் செல்வன் பற்றிய ஒரு பார்வை

யாழ்.நூலகமும் யாழ்ப்பாணமும்

ஹிட்லரின் எனது போராட்டம்